நாட்டின் விவசாயத்தை புதிய நிலைக்கு கொண்டுவருவதற்கான ஒரு பெரும் வேலைத் திட்டத்தை கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள எமது விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. நெற் பயிர்ச் செய்கை அதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நெற் பயிர்ச் செய்கையில் புதிய தொழில் நுட்பத்தை இணைத்து அதிக விளைச்சலையும் மற்றும் அதிக உற்பத்தியை அடைய நாம் அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு பெரும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு 'தேசிய நெல் உற்பத்தி பண்ணை நிகழ்ச்சித் திட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதை 2025 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த 2025/26 பெரும்போகத்தில், இலங்கை முழுவதும் ஐநூறு நெல் பண்ணைகளைத் தேர்ந்தெடுத்து, இந்த புதிய தொழில் நுட்பத்துடன் நெற் பயிர்ச் செய்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து விவசாயிகளுக்குக் கற்பிப்போம். செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 04 ஆம் திகதி வரையிலான வாரத்தை ஊக்குவிப்பு வாரம் என பெயரிட்டுள்ளோம். இதில், விவசாயிகளுக்கு போதிக்கவும், எமது விவசாய உத்தியோகத்தர்களை ஒன்றிணைக்கவும் மற்றும் இந்தப் பண்ணைகள் மூலம் நெற் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
விவசாயிகளை எமது விவசாய உத்தியோகத்தர்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வயல்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, இந்த வயல்களில் புதிய தொழில் நுட்பத்தை இணைத்து நெல் பயிர்ச் செய்கையை தொடர வேண்டும். இங்கு, வயல் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சுத்தமான விதை நெல்லைப் பயன்படுத்தி, பருவத்திற்கு ஒரு இனத்தை மட்டுமே பயிரிடுதல், ஆழமாக உழுதல், மண்ணைச் சோதித்து இரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நெற் களைகளை கட்டுப்படுத்த ஒரு முறையான திட்டத்தை செயற்படுத்துதல் என்பன புதிய தொழில்நுட்ப பொதியில் உ்ளடக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புதிய தொழில் நுட்ப பொதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வாரம், விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த தொழில் நுட்ப பொதியைப் பற்றி அறிந்துகொண்டு, பயிர்ச் செய்கை காலம் முழுவதும் விவசாயத் திணைக்களத்துடனும் மற்றும் கமத்தொழில் அமைச்சுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தேசிய நெல் விவசாயத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள எம்முடன் ஒன்றிணையுங்கள்.
இங்கு, 2028 ஆம் ஆண்டுக்குள் ஒரு ஹெக்டேருக்கு 7.1 மெற்றிக் டொன்னாக உற்பத்தியை அதிகரிக்க நாம் உண்மையிலேயே எதிர்பார்க்கின்றோம். இந்த பயிர்ச் செய்கைப் போகத்தில் 500 ஹெக்டேரிலிருந்து 2028 ஆம் ஆண்டுக்குள் 5,000 ஹெக்டேராக. இது எமது விவசாயிகளுடன் நாம் மேற்கொள்ளக்கூடிய ஒரு பயணம் என நாம் நினைக்கின்றோம். எமது விவசாய உத்தியோகத்தர்களிடமும் விவசாயிகளிடமும் ஆர்வம் இருக்க வேண்டும். இது நாம் ஒன்றாக, கைகோர்த்து பயணிக்க வேண்டிய ஒரு பயணம்.
தேசிய நெல் உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம், எமது விவசாயத் திணைக்களத்தால், மாகாணங்களுக்கு இடையில், மகாவலி மற்றும் மாகாண விவசாயத் திணைக்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டம் புனருதயத அருணலு அக்ரி பிளஸ் என்ற வர்த்தக குறியீட்டின் கீழ் செயற்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரிடையேயும் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இலங்கையின் விவசாயத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.