web Header2

   



உள்ளக கணக்காய்வுப் பிரிவு

அறிமுகம் 

 

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு என்பது நிதி மற்றும் கணக்குகள் தொடர்பான தொழிற்பாடுகள் அதே போல் இயக்கச்செயற்பாட்டு நடவடிக்கைகள் முதலிய கரும பணிகளுக்கு மேலதிகமான பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சினது செயலாளரின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள ஒரு சுயாதீனப் பிரிவாகும்.

தேசிய கணக்காய்வு சட்டத்தினது 40 ஆம் பிரிவின் பிரகாரம் செய்யப்பட்டுள்ள நியமனங்கள் 133 மற்றும் 134 ஆம் இலக்க நிதிப்பிரமாணக் குறிப்புகள் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத் தத்துவங்கள் மற்றும் தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38 () மற்றும் () ஆகிய பிரிவுகள் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொறுப்புக்கூறும் பிரதான அதிகாரியின் பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்வதற்காக முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் 01/2019 ஆம் இலக்க 2019/01/12 ஆம் திகதிய சுற்றறிக்கையில் காணப்படுகின்ற விதிமுறைகளின் பிரகாரம் கணக்காய்வு விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிக்கோள்

 

  • அமைச்சிலும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை பற்றி ஆராய்ந்து அந்த முறைமைகளில் நிகழும் தவறுகள் மற்றும் மோசடிகள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதற்கும் மற்றும் வெளிப்படுத்திக் கொள்வதற்கும் பிரயோகிக்கப்படும் உள்ளகப் பரிசீலனை முறைகள் முறையாகவும் போதியளவிலும் பின்பற்றப் படுகின்றனவா என்பது பற்றி தொடர்ச்சியாக ஆராய்ந்து சுயாதீனமான ஒரு மதிப்பீட்டை பேணிச்செல்லல்.
  • அமைச்சினாலும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களினாலும் செயற்படுத்தப் படும் அபிவிருத்திக் கருத் திட்டங்களையும் பிரேரணைகளையும் செயற்படுத்தி நிறைவேற்றுதல் மற்றும் திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் நிறைவு செய்தல் முதலிய விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் பொறுப்புக்கூறும் பிரதான அதிகாரிக்கும் முன்னேற்றம் பற்றி கண்காணிக்கும் குழுவுக்கும் உதவுதல்.
  • உரிய சந்தர்ப்பங்களில் இந்தக் கரும பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் முன்னேற்றம் பற்றி/கண்காணிக்கும் குழுவுக்கும் இடையில் ஒருங்கிணைப்புப் பிரிவாகவும் தொழிற்படுதல். 

கரும பணிகள் 

 

  • தவறுகளையும் மோசடிகளையும் தவிர்த்துக் கொள்ளும் நிமித்தம் அமைச்சில் செயற்படுத்தப்படும் உள்ளகப் பரிசீலனை மற்றும் கட்டுப்பாட்டு முறைமை திட்டமிடல், நியம செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றிகரமாக தொழிற்படுகின்றதா என்பது பற்றி ஆராய்தல்.
  • கணக்குகள் மற்றும் வேறு அறிக்கைகள் என்பவற்றின் நம்பத்தகுதன்மையை நிச்சயப்படுத்திக் கொள்ளல் மற்றும் பிரயோகிக்கப்பட்டுள்ள கணக்கீடு சார்ந்த நியமங்கள் என்பவற்றின் மூலம் சரியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் நிமித்தம் தேவையான தகவல் கிடைக்கின்றனவா என்பது பற்றி ஆராய்தல்.
  • பதவியணிக்கு சாட்டப்பட்டுள்ள பொறுப்புப் பணிகளை நிறைவேற்றுவதில் ஊழியர்களினது செயலாற்றுகையின் தரம் பற்றி மதிப்பிடுதல்.
  • திணைக்களத்தின் சொத்துக்கள் சகல விதத்திலும் நட்டம் இல்லாமல் எவ்வளவு தூரத்திற்கு பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றி ஆராய்தல்.
  • அரசாங்கத்தின் தாபனவிதிக் கோவை, அரசாங்கத்தின் நிதிப் பிரமாணக்குறிப்பு மற்றும் பொது நிருவாக விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சரினாலும் மற்றும் திறைசேரியினாலும் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டுள்ள வேறு குறைநிரப்பு அறிவுரைகள் என்பன பின்பற்றப்படுகின்றனவா என்பது பற்றி ஆராய்தல்.
  • வீணாதல், தகாத ஆற்றலினுள் வரையறையை விஞ்சி மேற்கொள்ளப்படும் செலவுகள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதற்கும் மற்றும் வெளிப்படுத்திக் கொள்வதற்கும் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையின் வெற்றிகரமான தன்மை பற்றி ஆராய்தல்.
  • அமைச்சினதும் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களினதும் கணக்குகள் தொடர்பான நடைமுறை மற்றும் ஏதாவது நிதி செலவுகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகள் என்பவற்றை பரிசீலித்தல் மற்றும் அந்தந்த நிறுவனங்களினது சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் என்பன பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி ஆராய்தல்.
  • தேவையான சந்தர்ப்பங்களில் விஷேட விசாரணைகளை மேற்கொள்ளல்.
  • நுட்ப அல்லது கணக்கீட்டு கோணத்திலிருந்து விலகி முகாமைத்துவம் சார்ந்த கோணத்தில் அமைச்சினது செயற்பாடுகளையும் கருமங்களை பரிசீலித்து அது தொடர்பான அறிக்கைகளை தயாரித்தல்.
  • வேலைத் திட்டப் பிரேரணைகள் மற்றும் கருத் திட்டங்கள் என்பன தொடர்பான முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கால அட்டவணைகள் என்பன எவ்வளவு தூரம் இலக்கை அடைந்து கொள்வதற்கு பயன்பட்டுள்ளன என்பது பற்றி மதிப்பிடுதல்.
  • வேலைகளை செயற்படுத்துதல் தாமதமடைவதற்கான பிரச்சினைப் பிரிவுகள் பற்றிய தற்கால கள ரீதியான விசாரணையை மேற்கொள்ளல்.
  • செயற்பாட்டு கருமங்களை கண்காணிப்பது தொடர்பில் பிரயோகிக்கப்படும் கட்டுப்பாட்டு முறைமைகளை மதிப்பிட்டு மீளாய்வு செய்தல். 

சமூக வலையமைப்பு

 Facebook
                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்