எங்களை பற்றி


"தேசிய சுபீட்சத்தை அடையும் வகையில், நிலையான உணவு உற்பத்தி, வாசளனத் திரவியங்கள் மற்றும் இவை சார்ந்த விவசாயத்துறை" எனும் முன்னோக்கிய பார்வையூடாகவும், இதற்கான கொள்கைத் திட்டங்களை வகுப்பதினூடாகவும் உணவு உற்பத்தி, வாசனைத்திரவியங்கள் மற்றும் இவை சார்ந்த துறையின் செயலாற்றுகையின் விளைவிப் பெருக்கத்தையும், வினைத்திறனையும் அத்தாட்சிப் படுத்தும் வகையில், உரிய தரப்பினர்களுக்கும், சேவை பெறுனர்களுக்கும் தேவையான வழிகாட்டல்களையும், ஒருங்கிணைப்பையும் நிபுணத்துவ மட்டத்தில் உரிய வேளைக்குப் பெற்றுக்கொடுப்பதினூடாக, தேசிய சுபீட்சத்தை அடையும் பொருட்டு, சுவிசேட பங்களிப்பை வழங்கும் செயற்பணியில் கமத்தொழில் அமைச்சு செயற்படுகின்றது.

 

 

 

நோக்கு

“உணவுப் பாதுகாப்பையும் தேசிய சுபீட்சத்தையும் நோக்காகக் கொண்ட வினைத்திறன் மிக்கதும், விளைவுப் பெருக்கமுடையதும், பலமானதுமான விவசாயத்துறை” 

 

செயற்பணி

“இயற்கை வளங்களை நிலைபேறான விதத்தில் முகாமை செய்வதினூடாக சமூக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட புதுவடிவமுடையதும் வர்த்தக நோக்கத்துடன் கூடியதுமான, பூகோல ரீதியில் போட்டிமிகு உற்பத்திகளை மேற்கொள்ளும் தொழில்முயற்சி விவசாயத்துறையொன்றை அடைதல்”

 

 

அமைச்சின் இலக்குகள்

  • உணவு, வாசணைத்திரவிய மற்றும் இவை சார்ந்த விவசாயப் பயிர்த்துறைக்கு கொள்கை ஒத்துளைப்பை வழங்குதல்.
  • உணவு மற்றும் போசாக்குப் பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • விவசாய உற்பத்திகளுக்கான தளம்பலற்ற விலையை முன்னெடுத்துச் செல்லல்.
  • நெல் இருப்புக்களை கொள்வனவு செய்தலும் சந்தை நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறன் மிக்க வகையில் முகாமை செய்தலும்.
  • கருத்திட்டங்களை உரிய வேளையில் அமுல் செய்தல்.
  • தெரிவு செய்யப்பட்ட பயிர்களின் உற்பத்தியை அதிகரித்தல்.
  • துரித உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை வினைத்திறன் மிக்க வகையிலும், விளைவுப் பெருக்கமுள்ளதாகவும் அமுல் செய்தல்.
  • வெளிநாட்டு நிதி அமைப்புக்களை வினைத்திறன் மிக்க வகையிலும் விளைவுப்பெருக்கமுள்ளதாகவும் ஈடுபடுத்தல்.
  • சேவை வழங்குணர்களுக்கு நட்புறவுடனான மற்றும் சிறந்த பெறுபேறுகளை நோக்காகக் கொண்ட நிருவாக முறையொன்றை அமுல் செய்தல்.
  • முழு அரச சேவையிலும் விளைவுப் பெருக்கமுள்ள முகாமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தல்.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்