Mr. Janaka Dharmakeerthi assumed duties as the new secretary of the Ministry of Agriculture and Plantation Industries.
இந்த ஆண்டு பெரும்போகத்தில் மூன்று மாவட்டங்களில் மரக்கறி மற்றும் இதர பயிர்களை பயிரிடும் 3,000 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கட்டார் தொண்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் கீழ் விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் எமது நாடு உணவுப் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியா அடங்கலாக பல நாடுகளில் பரவி வரும் இந்த “நீபா” வைரஸ் காரணமாக இந்த நாட்டில் பன்றி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளதாகவும் அதனால் பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கமத்தொழில் அமைச்சின் கால்நடைகள் அபிவிருத்திப் பிரிவினது அதிகாரிகள் நேற்று (04) ஆம் திகதி அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் தெரிவித்தனர்.
2023.09.21 ஆம் திகதியின் நிலவரப்படி, இந்த ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தின் அளவு 68,802.20 ஏக்கராக அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையும் 70,597 ஆக அதிகரித்துள்ளது.