MOA (1)

 

 

   



சுமார் 7,000 விவசாயிகளைப் பாதித்துள்ள தெதுரு ஓயா இங்கினிமிட்டிய நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆய்வு விஜயத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் பங்கேற்கவுள்ளார்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து இங்கினிமிட்டிய வரை 35 கி.மீ தூரத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான கால்வாய் 25 கி.மீ. தூரத்திற்கு கான்கிரீட் போடப்பட்டுள்ளது.

எஞ்சிய 10 கி.மீ. கால்வாய் வெட்டப்பட்டாலும் தண்ணீர் பாய முடியாத அளவுக்கு அடைக்கப்பட்டுள்ளது. கஹண்டவெவ இடத்தில் தண்ணீர் கீழே பாய முடியாதபடி மதகை நிறுவுவதன் மூலம் இது மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட 10 கி.மீ. பரப்பளவில், சுமார் 7000 விவசாயிகள் இடது மற்றும் வலது கரைகளில் நெல் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த இந்த சுமார் 7000 விவசாயிகளும் இந்த முறை தண்ணீர் பற்றாக்குறையால் அவர்களின் நெல் வயல்களில் அவர் நெல்லைப் பயிரிடவில்லை. மேலும் கடுமையான நீர் பிரச்சினையையும் எதிர்கொண்டனர்.

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திற்கு கால்வாய்கள் மூலம் தண்ணீரைப் பெறுவதற்காக, கிட்டத்தட்ட 13 மில்லியன் ரூபாய் செலவான இந்தக் கருத் திட்டம், முன்னைய ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்தக் கருத் திட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விடுத்த விஷேட வேண்டுகோளின் பேரில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்கள் இங்கினிமிட்டிய பகுதியில் ஆய்வு விஜயத்தை மேற்கொண்டார்கள். இங்கு, விவசாயிகளுடன் ஒரு கலந்துரையாடலில் அமைச்சர் பங்கேற்றார். விவசாயிகள் உண்மைகளை தெளிவுபடுத்திய பின்னர், ஆய்வை நடத்த அமைச்சர் முடிவு செய்தார். பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டாக்டர் சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு அஜித் கிஹான், பிராந்திய விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கலாக பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதை விரைவில் தொடங்குவதாகவும், பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும் இதை அதிகாரிகளிடடும் வலியுறுத்தினார்.

சமூக வலையமைப்பு

 Facebook

 

ytpngwing.com YouTube

 


                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்