நீர்ப்பாசன மறுமலர்ச்சியின் நிமித்தம் 'நீர்ப்பாசன மகிமை-எமது மரபுரிமை' என்ற கல்ஓயா நீர்ப்பாசன மறுசீரமைப்பின் ஆரம்ப விழா, இன்று (05) கல்ஓயாவின் தென் கரையில் உள்ள நைக்காடுவில் இன்று கமத்தொழில் கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர, சேனநாயக்க சமுத்திரம் அடங்கலாக நீர்த்தேக்கங்களிலிருந்து நெற் பயிர்ச்செய்கையின் நிமித்தம் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் நீரை வழங்கும் என தெரிவித்தார். நாட்டின் அரிசி உற்பத்திக்கு அம்பாறை மாவட்டம் குறிப்பிடத்தக்களவில் பங்களிக்கின்றது என்பதையும் பணிப்பாளர் நாயகம் நினைவுபடுத்தினார். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் மூலம் அம்பாறை மாவட்டத்திற்கு சுமார் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
"இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி நவம்பர் மாதத்திற்குள் பயன்படுத்தப்பட்டு முடிக்கப்பட வேண்டும். திகாமடுல்லாவிற்கு ரூ. 900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்துள்ள இந்தப் பணிக்காக ரூ. 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத் திட்டத்தின் மூலம், குளக் கட்டைப் பாதுகாக்க ஒரு மண் அணை பயன்படுத்தப்பட்டுள்ளது. மண் அணையைப் பாதுகாக்க கருங்கற்களைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இந்த மண் அணையைப் பாதுகாக்க முடியாது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியது போல், குளக் கட்டு ஓரமாக மதிரை மரங்களை வளர்க்க வேண்டும். இது நீண்ட காலத்திற்கு குளக் கட்டைப் பாதுகாக்கும். மதிரை மரங்களைப் பாதுகாக்க, விவசாயிகளினதும் மற்றும் கமக்காரர் அமைப்புகளினதும் ஆதரவு எமக்கு அவசியம். இந்த மரச்செடிகள் விலங்குகளால் சேதமடையக்கூடும். ஆகையால், கமக்காரர் அமைப்புகளின் பொதுப் பிரதிநிதிகளுடன் கைகோர்த்து இந்த மரச்செடிகளைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."
"நாம் விரைவாக வேலை செய்யவில்லை என்றால், இந்த வேலையை நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியாது. பொறியியலாளர்கள் குளக் கட்டை அமைத்து முடித்தவுடன், நவம்பர் மாதத்திற்குள் அந்தக் குளக் கட்டை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியும்."
"எமது நாட்டின் அழிவுக்கு பங்களித்த இரண்டு குழுக்கள் உள்ளன. ஒன்று அரசியல் குழு. அவை பெரிய அளவில் திருட்டு, ஊழல், மோசடி மற்றும் சுரண்டல் முதலிய அநியாயங்களை செய்தன. அவை எமது நாட்டு மக்களின் அபிவிருத்திற்கு பயன்படுத்த வேண்டிய வேண்டிய பணத்தை அழித்துவிட்டன. இதன் விளைவாக, அபிவிருத்தி தடைபட்டது. இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் அமைச்சர்ளும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்கின்றார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதில், அரசியலுக்காக நாம் செய்ய வேண்டிய இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று திருடக்கூடாது. மற்றொன்று திருடியவர்களைத் தண்டிப்பதும் மற்றும் இவ்வளவு காலமாக திருடப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதும் ஆகும். இந்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதை நீங்கள் தெளிவாகக் காணலாம். பொது சேவையும் எமது நாட்டின் அழிவுக்கு நேரடி பங்களித்துள்ளது. மக்களை மகிழ்விக்கும் ஒரு பொது சேவையை உருவாக்குவதும் எமக்கு இருக்கின்ற ஒரு பெரும் சவாலாகும். பழைய முறையைக் கைவிட்டு பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணிக்குமாறு பொது அதிகாரிகளை நாம் கேட்டுக்கொள்கின்றோம், இல்லையெனில் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எமது அமைச்சில் நாம் ஒரு புதிய கலாச்சாரத்தை ஆரம்பித்துள்ளோம். அதன்படி, பொதுமக்கள் எம்மிடம் அவர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று வந்தால், அத்தகைய நபர்களின் பெயர்களும் மற்றும் தொலைபேசி இலக்கங்களும் உரிய அதிகாரிக்கு அனுப்பப்படும் போது, அந்த அதிகாரிகள் "அந்தக் கடமையை முறையாகச் செய்யும் அதிகாரிகளாக இருப்பார்கள். நீர்ப்பாசனப் பணிப்பாளர் அவர்களை இந்த நேரத்தில் மதிக்க கடமைப்பட்டுள்ளேன்."
"அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே நாம் முன்வைக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். முடிந்தவரை மக்களுடன் நாம் இணைந்திருக்க வேண்டும். பொது சேவையை நாம் கட்டமைத்து வருகின்றோம். அதற்கு சிறிது காலம் எடுக்கும். அரசியல் ஒரு மோசமான நிலையிலிருந்து நல்லதொரு நிலைக்கு பரிவர்த்தகையாகி வருகின்ற ஒரு மாறும் காலகட்டத்தை நாம் கடந்து செல்கின்றோம். சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அந்த நிலையை மாற்றவும் காலம் எடுக்கும். சமூகத்திலும் இனவெறியும் மற்றும் மதவாதமும் தாண்டவமாடுகின்றன. சமூகத்தில் கட்டியெழுப்ப வேண்டியது சகோதரத்துவம். அரசியல், பொது சேவை, சமூகம் மற்றும் பொருளாதார கலாச்சாரத்தை மாற்றியமைத்து இந்தப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். நாம் அந்தப் பயணத்தை ஆரம்பித்தோம். இது ஒரு பெரும் பொறுப்பாகும்."
கிராமிய அபிவிருத்தி, பொதுப் பாதுகாப்பு மற்றும் சமூக ஊக்குவிப்புப் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களும் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.