Header jpg

   



சிறுபோகத்தில் 2.6 மெற்றிக் டொன் நெல் விளைச்சல் பதிவாகியுள்ளது

2024 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நெல் அறுவடை ஒருபோதும் இல்லாத அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, ஏனைய சிறுபோகங்களில், இந்த நாட்டில் நெல் அறுவடை 1.6 மில்லியன் மெற்றிக் டொன் அல்லது 02 மில்லியன் மெற்றிக் டொன் என பதிவாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு நெல் அறுவடை 2.6 மில்லியன் மெற்றிக் டொன்னாக அதிகரித்துள்ளதால், இது நாட்டின் வருடாந்த அரிசியின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாகும்.

எமது நாட்டில் மாதாந்த அரிசியின் தேவை 200,000 மெற்றிக் டொன். இதன்படி, வருடாந்த அரிசியின் தேவை சுமார் 2.4 மில்லியன் மெற்றிக் டொன்களாகும்.

கடந்த பெரும்போகத்தில் 3.2 மில்லியன் மெற்றிக் டொன் நெல் அறுவடை செய்யப்பட்டதாலும் மற்றும் இந்த ஆண்டு சிறுபோகத்தில் 2.6 மில்லியன் மெற்றிக் டொன் நெல் அறுவடை செய்யப்பட்டதாலும் இந்த ஆண்டு மொத்த நெல் அறுவடை 5.8 மில்லியன் மெற்றிக் டொன்னாக அதிகரித்துள்ளது.

உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு 03 மில்லியன் மெற்றிக் டொன்னை தாண்டியுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் பல வருடங்களின் பின்னர் முதல் தடவையாக அரிசி மிகையாக இந்த வருடம் பதிவாகியுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசு வழங்கும் மானியம், உரங்களின் விலை குறைவு, அதிக விளைச்சலை தரக்கூடிய புதிய இன விதைகள் அறிமுகம், புதிய தொழில் நுட்பங்களின் அறிமுகம் என்பவற்றினால், சில நெல் விளைச்சல் பகுதிகளில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது.

உதாரணமாக, அம்பாந்தோட்டை, உடவலவ, அம்பாறை, பொலன்னறுவை, இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் ஒரு ஹெக்டேருக்கான நெல் விளைச்சல் 12 மெற்றிக் டொன்னை தாண்டியுள்ளது.

இதன்காரணமாக இந்த வருடம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், இந்த வருடம் வெள்ளத்தினால் சுமார் 100,000 ஹெக்டேர் ஏக்கரில் சேதம் ஏற்படாமல் இருந்திருந்தால் விளைச்சலை மேலும் அதிகரித்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

சமூக வலையமைப்பு

 Facebook
                         
         கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல்வளங்ஙள் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்