කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கும்

இந்த வருடத்திற்கு நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 2000 மில்லியன் ரூபாவை வழங்குமாறு கோரி கடந்த ஜூன் மாதம் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஒரு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (26) பிற்பகல் கூடிய அமைச்சரவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு முதல் கட்டமாக 500 மில்லியன் ரூபாவை வழங்க தீர்மானித்ததாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் சட்டத்தரணி புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

அதற்கு இணங்க இன்று (27) முதல் நெல் கொள்வனவை ஆரம்பிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

அதற்காக நெல் அறுவடை நிறைவடைந்த மாவட்டங்களில் அமைந்துள்ள 32 நெல் களஞ்சியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 100 நெல் களஞ்சியசாலைகள் தேவைப்படும் போது திறந்து வைக்க தயார்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

தற்போது சந்தையில் நெல்லுக்கு அதிக விலை நிலவுவதால் தனியார் நெல்லை 120 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனாலும் விவசாயிகள் தம்மிடம் உள்ள நெல்லை அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவார்கள் என நம்புவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் கிரி சம்பா நெல்லின் விலை 105 - 110 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஆனால் கிரி சம்பா நெல்லுக்கு அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலையான 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய நெல் இனங்களை விவசாயிகள் அதிகளவில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக தலைவர் தெரிவித்தார்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்