கறுவா, தேயிலை, தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலையை கணிசமானளவில் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, அரசாங்க உரக் கூட்டுத் தாபனத்திற்கு இன்று (17) ஆலோசனை வழங்கினார்.
இதன்படி, அரசாங்க உரக் கூட்டுத் தாபனத்தால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 1500 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாக குறைக்கப்படும் என அரசாங்க உரக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.
இதன்படி, கறுவா, தேயிலை மற்றும் தென்னை ஆகிய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் அரசாங்க உரக் கூட்டுத் தாபனத்தால் உற்பத்தி செய்யப்படும் உரங்களை பின்வரும் விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உரத்தின் வகை |
தற்போதைய விலை (50 கி.கி. நிறையுடைய ஒரு உர உறை - ரூபா) |
விற்பனை செய்யப்படவுள்ள விலை (50 கி.கி. நிறையுடைய ஒரு உர உறை - ரூபா) |
APM |
9,000 |
7,200 |
YPM |
8,000 |
6,200 |
கறுவா (யூரியா) |
9,750 |
7,950 |
கறுவா (SA) |
8,000 |
6,200 |
TDM |
11,000 |
9,200 |
உரத்தின் விலையை குறைப்பது தொடர்பான ஒரு கலந்துரையாடல் இன்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இது தவிர அரசாங்க உரக் கூட்டுத் தாபனத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு வகை உரத்தின் விலையை ஒரு மெற்றின் டொன்னுக்கு 5000 ரூபாவினால் குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கறுவா, தேயிலை மற்றும் தேங்காய் என்பவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு உரத்தின் பாவனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு ஜானக தர்மகீர்த்தி, கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் திரு ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன, தேசிய உர செயலகத்தின் தலைவர், அரசாங்க உரக் கூட்டுத் தாபனத்தின் தவைலர் கலாநிதி ஜகத் பெரேரா அடங்கலாக பலரும் கலந்துகொண்டனர்.