கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பயிர்ச்செய்கையை இந்த சிறுபோகம் முடிந்தவுடன் உடனடியாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
கமத்தொழில் அமைச்சு, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகார சபை, கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளினதும் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பிரிவுகளினதும் அதிகாரிகளினதும் பங்குபற்றலில் 2024 ஆம் ஆண்டின் இடைக்காலப் பயிர்ச் செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று (03) நடைபெற்றது.
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இடைக்காலப் பயிர்ச் செய்கையை சிறுபோக நெல் அறுவடை முடிந்தவுடன் ஐப்பனெல்லையில் பாசிப்பயறு செய்கையை ஆரம்பிக்க வேண்டுமென்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதன்படி, நீர்ப்பாசனத்தின் கீழ் 40,000 ஏக்கர்களிலும், மகாவலியின் கீழ் 16,250 ஏக்கர்களிலும் மற்றும் மாகாணங்களுக்கு இடையில் 7,500 ஏக்கர்களிலும் என மொத்தம் 63,750 ஏக்கர்களில் பாசிப்பயறைப் பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டது.
தற்போது இதற்கு தேவையான பாசிப்பயறு விதைகள் போதியளவு விவசாயிகளின் வசம் உள்ளதாகவும், சுமார் 150,000 கிலோ பாசிப்பயறு விதைகள் உள்ளதாகவும் விவசாய திணைக்களத்தின் பாசிப்பயறு பயிர்ச்செய்கை பற்றிய தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டில் ஆண்டுக்கு பச்சை பீன்ஸ் தேவை 20,000 மெற்றிக் டொன்கள். 25,000 ஹெக்டேர் காணிகளில் பயிரிட்டால் இந்த அளவைப் பூர்த்தி செய்ய முடியும் என இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக் காட்டப்பட்டது.
எனவே, இடைக்காலப் பயிர்ச்செய்கைப் போகத்தில் இந்த நாட்டுக்குத் தேவையான முழு அளவிலான பாசிப்பறை உற்பத்தி செய்யும் வகையில் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரிவுகளுக்கும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு. ஜானக தர்மகீர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.