கடந்த காலங்களில் நிர்வாக பலவீனம் காரணமாக மில்கோ நிறுவனத்தின் நாளாந்த திரவப் பாலை தனது தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவது 65,000 லீற்றர்களாக குறைந்திருந்தது.
சராசரியாக, இந்த நிறுவனத்தின் நாளாந்த திரவ பால் இலக்கு 120,000 லீற்றர்களாகும். இந்த அளவு 50 வீதத்தால் குறைந்திருந்தது. கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர அவர்கள் நிறுவனத்தின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.
இதன்படி, பால் மைய பொருட்களுக்கு நாளாந்தம் பயன்படுத்தப்படும் திரவப் பாலை 140,000 லீற்றர் என்ற அளவை விஞ்சி தனது நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் திரு இந்திக குருகே கூறுகின்றார்.
மில்கோ நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு குறித்து கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் இந்திக குருகே அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி தற்போது மில்கோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் 80 மெற்றிக் டொன் ஹைலேண்ட் பால் மாவு களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மில்கோ நிறுவனத்தின் பால் மாவு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, ஹைலேண்ட் ஐஸ்கிரீம் மற்றும் தயிர் ஆகியவற்றின் உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளது.