web Header2

   



தற்பொழுது 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு மானியத் திட்டத்தின் கீழ் சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபாவை விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கு கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 213,771 விவசாயிகளுக்கு 2.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது. மானியம் வழங்கப்பட்ட நெற் காணியின் அளவு 167,362 ஹெக்டேயர்களாகும்.

இந்த ஆண்டு சிறுபோகத்தில் சுமார் 450,000 ஹெக்டேயர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும், பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்களுக்கும் சுமார் 7.5 பில்லியன் ரூபா நிதி மானியமாக வழங்கப்படும் எனவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர அவர்கள் 2024 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ளும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேயருக்கு 15,000 ரூபா வீதம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தார். அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன்படி, பயிர் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் இந்தப் பணத்தைக் கணக்கிடுவதற்கான முறையான தகவல் மற்றும் தரவு முறைமையை கமநல அபிவிருத்தித் திணைக்களம் தயாரித்துள்ளது.

இதேவேளை, பல விவசாயிகள் தமது நெற்பயிர்களுக்கு யூரியா உரத்தை மாத்திரம் இடுவதாக தகவல் கிடைத்துள்ளது. MOP அல்லது தாவரம் பூக்கும் காலத்தில் இடப்படும் உரம் இடப்படாததால் காய்கள் மற்றும் நெல் விதைகள் முதிர்ச்சியடைகாமல் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதாக விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தாவரம் பூக்கும் காலத்தில் இடப்படும் உரம் இடப்படாவிட்டால் வேர் முறைமை பலவீனம் அடைந்து தண்டு மஞ்சள் நிறமாதல் போன்ற நிலைகள் உருவாகலாம்.

எனவே அரசாங்கம் வழங்கும் மானியப் பணத்தைப் பயன்படுத்தி யூரியா உரத்திற்குப் பதிலாக தாவரம் பூக்கும் காலத்தில் இடப்படும் உரத்தைப் பயன்படுத்துமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கின்றார். தற்போது, ​​அரசுக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் தாவரம் பூக்கும் காலத்தில் இடப்படும் தேவையான அளவு உரத்தை நாடளாவிய ரீதியில் விநியோகித்துள்ளதுடன், தனியார் துறையினரும் அந்த உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமூக வலையமைப்பு

 Facebook
                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்