කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



மூன்று மாவட்டங்களில் உள்ள நெல் தவிர ஏனைய பயிர்களை பயிரிடும் 3000 விவசாயிகளில் ஒரு விவசாயிக்கு உரத்தை பெற்றுக் கொள்ள 20,000 ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்க கட்டார் தொண்டு நிறுவனம் நன்கொடையை வழங்கியது

இந்த ஆண்டு பெரும்போகத்தில் மூன்று மாவட்டங்களில் மரக்கறி மற்றும் இதர பயிர்களை பயிரிடும் 3,000 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கட்டார் தொண்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் கீழ் விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (10) பிற்பகல் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கட்டார் தொண்டு நிறுவனத்தின் கருத் மஹ்மூத் அபு கலிபா அவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு. குணதாச சமரசிங்க அவர்களும் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பல பயிர்ச் செய்கை போகங்களில் நெல்லை பயிரிடும் விவசாயிகளுக்கு தேவையான நிதி மற்றும் பொருள் சலுகைகள் வழங்கப்பட்டாலும், காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு கணிசமான அளவில் சலுகைகளை வழங்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, கட்டார் தொண்டு நிறுவனம் வழங்கும் உதவியின் அடிப்படையில் மூன்று மாவட்டங்களில் மரக்கறி மற்றும் இதர பயிர்களை பயிரிடும் 3000 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 20,000 ரூபா பெறுமதியான உரம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

குருநாகல், மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவான நிலப் பரப்பில் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன் நிமித்தம் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளை தேர்ந்தெடுக்க கட்டார் தொண்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் திரு .மகிந்த அமரவீர, இந்த நன்கொடையின் மூலம் சோளம், மிளகாய், மரக்கறி போன்ற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் எனவும், நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு கடந்த காலத்தில் அரசாங்கம் பெருமளவு நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் பயனாக, நாட்டில் அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் என சில தரப்பினர் கூறிய போதும் அரிசியின் விலை 280 ரூபாவிலிருந்து 130 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் அண்மைக் கால வரட்சி மற்றும் தற்போதைய மழை ஆகியவற்றினால் மரக்கறி பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் எனவும், மரக்கறிகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்