කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



வறட்சி, மழை மற்றும் சேனாப் புழு பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஏறக்குறைய 70,000 ஏக்கருக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

2023.09.21 ஆம் திகதியின் நிலவரப்படி, இந்த ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தின் அளவு 68,802.20 ஏக்கராக அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையும் 70,597 ஆக அதிகரித்துள்ளது.

விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 68,340.35 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து 70,188 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெங்காயம், மிளகாய், சோளம், சோயா பீன்ஸ் பயிரிட்ட 409 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 461.85 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இது வரை பதிவாகியுள்ள அதிகளவான பயிர் சேதங்கள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதன்படி, அந்த மாவட்டத்தில் 26,813.67 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 32,245 ஆகும்.

இரண்டாவது அதிகளவிலான சேதம் உடவலவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதன்படி, 14,810.13 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன், 11,651 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5,483.75 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன், 4,493 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாத்தளை மாவட்டத்தில் 1,496 ஏக்கர், புத்தளம் மாவட்டத்தில் 2,244 ஏக்கர், பொலன்னறுவை மாவட்டத்தில் 1,728 ஏக்கர், மொனராகலை மாவட்டத்தில் 1,136 ஏக்கர், பதுளை மாவட்டத்தில் 1,044 ஏக்கர், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,721 ஏக்கர், அனுராதபுரம் மாவட்டத்தில் 1,748 ஏக்கர் என பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.

விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மேற்கொள்ளப்பட்ட பயிர் சேத மதிப்பீடுகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் பயிர் சேதம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை வரலாற்றில் அதிக பயிர் சேத நட்டஈட்டை அரசாங்கம் இம்முறை வழங்க வேண்டியிருக்கும் என அமைச்சர் கூறுகிறார்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்