web Header2

   



29.08.2023 அன்று அறிவிக்கப்பட்ட பயிர் சேதத்தின் அளவு - தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக சேதமடைந்த நெற்பயிர்களின் அளவு 58,766 ஏக்கராக அதிகரித்துள்ளது.

தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக 29.08.2023 அன்று பதிவாகியிருந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட பயிர் சேத அறிக்கையை கமநல மற்றும் விவசாய காப்புறுதி சபை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளது.

இதன்படி, 29 ஆம் திகதிக்குள், சேதமடைந்த நெற்பயிர்களின் அளவு, 58,766.97 ஏக்கர்களாக காணப்படுகின்றது.

இதில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 58,389.82 ஏக்கராகவும், ஏனைய பயிர்கள் பயிரிடப்பட்ட பரப்பு 377.15 ஏக்கராகவும் காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53,965 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான பயிர் சேதம் பதிவாகியுள்ளது. அதன் பிரகாரம் 26,195.11 ஏக்கராகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 31,427.

16,667.50 ஏக்கராக உள்ள உடவலவ பிரதேசத்தில் இரண்டாவது அதிக பயிர் இழப்பு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,867. மேலும், மாத்தளை மாவட்டத்தில் சேதமடைந்த நெல் ஏக்கரின் அளவு 1,496.35 ஆகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,255 ஆகவும் உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் சேதமடைந்த நெல் ஏக்கர் எண்ணிக்கை 1,765.56 ஆகவும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 1,185 ஆகவும் உள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் 470 விவசாயிகள் பயிர் சேதங்களைச் சந்தித்துள்ளதுடன், சேதமடைந்த நெல் ஏக்கரின் அளவு 1,149.75 ஆகும். இரத்தினபுரி மாவட்டத்தில் 1,971 விவசாயிகள் பயிர் சேதத்தை சந்தித்துள்ளதுடன், சேதமடைந்த நெல் ஏக்கரின் அளவு 1293.50 ஆகும்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் நிலவும் காலநிலையை கருத்திற்கொண்டு பயிர்ச்செய்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான கலந்துரையாடல் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்றது. கமத்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், பயிர்ச்செய்கை போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். நட்டஈடு வழங்குவது துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலையமைப்பு

 Facebook
                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்