ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37-வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டை எமது நாட்டில் நடத்துவதற்கு அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதற்காக தாம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் பின்னர் நாட்டைப் பாதித்த பொருளாதார நெருக்கடி நிலவிய காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் எந்த ஒரு சர்வதேச மாநாடும் இந்த நாட்டில் நடத்தப்படவில்லை.
UNFAO - ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை உயர் மட்டத்தில் எமது நாட்டில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று (28) அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த மாநாட்டில் 44 நாடுகளை சேர்ந்த 2000 எண்ணிக்கைக்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.