அடுத்த பயிர்ச் செய்கைப் போகத்தில் இருந்து மரக்கிறப் பயிர்களுக்கும் நெற் பயிருக்கு வழங்கப்படும் விலையிலேயே யூரியா உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் கூறுகின்றார்.

அடுத்த பயிர்ச் செய்கைப் போகத்தில் இருந்து மரக்கறிப் பயிர்களுக்கும் நெற் பயிருக்கு வழங்கப்படும் விலையிலேயே யூரியா உரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

பொருளாதார நிலையங்களின் முகாமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் ஆகியோருடன் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் குறிப்பிட்ட சில மரக்கறிகளின் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த விவசாயிகள் பிரதிநிதிகள், தற்போது நிலவும் வறட்சியினாலும் மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பாலும் மரக்கறிப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தனர்.

எனவே, நெற் பயிருக்கு போல், காய்கறிப் பயிர்களுக்கும் மானிய விலையில் யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நுவரெலியா, பதுளை, தம்புள்ளை போன்ற பிரதேசங்களில் விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது மரக்கறிப் பயிர்ச் செய்கைக்கு மானிய விலையில் யூரியா உரத்தை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்ததால் அடுத்த பெரும்போகத்தில் இருந்து மரக்கறிப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நெற் பயிருக்கு வழங்கப்படுகின்ற விலையிலேயே யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை உரக் கூட்டுத்தாபனம் மற்றும் வர்த்தக உரக் கூட்டுத் தாபனம் ஆகியன மரக்கறிப் பயிர்களுக்கும் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் கலப்பு உரங்களை தயாரித்து சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் இந்த உரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக, பொருளாதார நிலையங்களின் நிலை பற்றி தெரிவித்த அமைச்சர், பொருளாதார மத்திய நிலையங்கள் தாபிக்கப்பட்ட போது உத்தேசித்த நோக்கம் தற்போது தாண்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார நிலையங்கள் நல்ல நோக்கத்துடன் தாபிக்கப்பட்டன. குறிப்பாக விவசாயி மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் இவை தாபிக்கப்பட்டன. ஆனால் தற்போது, ​​பொருளாதார நிலையங்கள் நிருவகிக்கப்படுவதும் மற்றும் இலாபம் பெறுவதும் இரத்த உறிஞ்சிகள் என அழைக்கப்படும் வேறு இடைத்தரகர்களே. இந்த நிலை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து விசாரணை செய்வதற்கு அமைச்சர் குழுவொன்றை நியமித்தார். அதன்படி, அதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டு மாதங்களுக்குள் பொருளாதார நிலையங்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையின்படி பொருளாதார நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்