அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் இனம் தொடர்பாக விவசாய திணைக்களத்தின் கொள்கையை தெளிவுபடுத்துமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்

அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண விவசாயிகளால் பயிரிடப்பட்ட 44/1 இன நெற்பயிர் பெருமளவு விளைச்சலை கொடுத்துள்ள போதிலும், விவசாயிகள் அந்த நெல்லை விற்பனை செய்ய இயலாத நிலையை எதிர்நோக்கியுள்ளனர் என பாராளுமன்ற வளாகத்தில் இன்று (09) நடைபெற்ற கமத்தொழில் விடய ஆலோசனைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கலந்துகொண்ட கமத்தொழில் அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழு இன்று காலை குழு அறை இலக்கம் 01 இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக அமைச்சரிடம் கேட்டறிந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், இவ்வகை நெல், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் அல்லது தனியார் தரப்புகளினால் கொள்வனவு செய்யப்படுவதில்லை எனவும், நெல்லை அரிசியாக குற்றும் போது நெல் 03 பாகங்களாக உடைவதால் மேற்கூறிய இரண்டு திணைக்களங்களாலும் நெல் கொள்வனவு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் விவசாயிகள் ஏன் இத்தகைய நெல் இனத்தை பயிரிடுவதற்கு தூண்டப்பட்டார்கள் என்பதை விவசாயத் திணைக்களம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதே போல் எதிர்வரும் காலங்களில் இவ்வகை நெல் அல்லது வேறு வகை நெல் அறிமுகப்படுத்தப்படுமாயின் விவசாயத் திணைக்களத்தின் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்வகை நெல்லிலிருந்து பெறப்படும் அறுவடையை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த அல்லது நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கமத்தொழில் அமைச்சு, விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கலாக கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்