முட்டை உற்பத்திக்கு தேவையான தாய் விலங்குகள் பற்றாக்குறையை குறைக்கும் பொருட்டு குஞ்சு பொரிக்கும் இரண்டு லட்சம் முட்டைகளை (Hatching Eggs) இறக்குமதி செய்ய முடிவு

கால்நடைத் தீவனப் பற்றாக்குறையும் மற்றும் தாய் விலங்குகளின் ஆண்டு இறக்குமதி 80,000 முதல் 40,000 ஆகக் குறைந்திருப்பதும் தற்போது எமது நாட்டில் மாதாந்த முட்டை உற்பத்தி 30 மில்லியனாகக் குறைந்தமைக்கு காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் 80,000 தாய் விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், கடந்த ஆண்டில் அதன் அளவு 40,000 ஆகக் குறைந்துள்ளது. இது முட்டையினதும் மற்றும் கோழி இறைச்சியினதும் உற்பத்தியை பாதித்தது.

எனவே, தாய் விலங்குகளை இறக்குமதி செய்தால் முட்டை உற்பத்தி சுமார் 11 மாதங்கள் தாமதமாகலாம் என்பதால், அதற்கு பிரதியீடாக குஞ்சு பொரிக்கும் இரண்டு இலட்சம் முட்டைகளை (Hatching Eggs) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, கமத்தொழில் அமைச்சின் கால்நடைகள் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது, ​​கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தேவையான பூர்வாங்க ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. கால்நடைகள் அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள மிரிஸ்வத்தை மற்றும் மாரவில ஆகிய பண்ணைகளில் அமைந்துள்ள இரண்டு குஞ்சு பொரிப்பகங்களைப் பயன்படுத்தி, இறக்குமதி செய்யப்பட்ட குஞ்சு பொரிக்கும் முட்டைகளிலிருந்து தாய் விலங்குகளை உற்பத்தி செய்வதற்கு ஒரு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இறக்குமதியை தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கும் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சின் கால்நடைகள் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் என்பன தேவையான வசதிகளை வழங்கி வருகின்றன.

கடந்த காலம் முழுவதும் முட்டையினதும் மற்றும் கோழியினதும் உற்பத்தி மூலம் எமது நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், 2021 ஆம் ஆண்டில் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதனால் சோள உற்பத்தி 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இதனால், கால்நடைகளின் தீவன பற்றாக்குறை கால்நடைகளினது உற்பத்தியின் வீழ்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது.

எமது நாட்டில் முட்டையின் வருடாந்தத் தேவை சுமார் 2990 மில்லியன்களாகும். முட்டையின் மாதாந்தத் தேவை 249-250 மில்லியன்கள் ஆகும். ஆனால் தற்போது அது 30 இலட்சமாக குறைந்துள்ளது.

பெப்ரவரி மாத இறுதிக்கு முன்னர் இந்த குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்தால் எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்குள் இந்த நாட்டில் முட்டை உற்பத்தியை உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் என கால்நடைகள் அபிவிருத்தி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்