புத்தல - கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல்களைத் தடுக்கவும் காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது

புத்தள - கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் பற்றி பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த நிலைமையை தடுக்க குறுகிய கால ஒரு வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் நள்ளிரவு வரை யால கல்கே வனப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளையும் மற்றும் வாகனங்களையும் ஈடுபடுத்தி புத்தள - கதிர்காமம் வீதியில் தங்கியிருக்கும் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி, வாகன விபத்துக்களை தடுக்கும் வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி இந்த வேலைத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. வனஜீவராசிகள் திணைக்களம் இந்த வேலைத் திட்டத்தை இனிமேல் தொடர்ந்து நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

இந்த வீதியில் வாகனங்களில் பயணிக்கும் சிலர் காட்டு யானைகளுக்கு உணவளிப்பதாலும், அந்த யானைகள் வாகனங்களில் இருந்து உணவுகளை பெற்றுக் கொள்ள பழகியிருப்பதாலும், சில பயணிகளும் மற்றும் சாரதிகளும் காட்டு யானைகளை குழப்பியடித்து அதனால் ஒரு சில ஆரம்ப மன மகிழ்ச்சியடைவதற்கு முயற்சிப்பதாலும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே புத்தல - கதிர்காமம் வீதியில் மட்டுமன்றி உடவலவ, ஹபரணை போன்ற இடங்களிலும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் நபர்களையும், தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் நபர்களையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த 04 நாட்களாக புத்தல - கதிர்காமம் வீதியில் நடமாடும் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமையினால் காட்டு யானைகள் வீதிக்கு வருவதை நிறுத்தியுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்