இந்தப் பெரும்போகப் பயிர்ச் செய்கை காலத்தில் ஒரு ஹெக்டேயர் நெல் வயலுக்கு 176 கிலோ கிராம் வீதம் யூரியா உரத்தை பெற்றுக் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது

இந்த வருடம் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு 176 கிலோ கிராம் யூரியா உரத்தை வழங்க விவசாய திணைக்களம் பரிந்துரைத்துள்ளதாக கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நெட்டோல்பிட்டிய கமநல சேவை நிலையத்தில் இன்று (14) காலை விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்க் கடன் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு பெரும்போகத்திற்கான பயிர்க் கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று (14) ஆரம்பமானதுடன், 10 விவசாயிகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் அமைச்சர் வழங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு சிறுபோகத்தில் 01 ஹெக்டேருக்கு நெல் பயிரிடும் பொருட்டு 100 கிலோ கிராம் யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 70% இரசாயன உரமும், 30% இயற்கை உரமும் இட வேண்டும் என விவசாய திணைக்களம் பரிந்துரைத்ததால், நெல் பயிருக்கு வழங்கப்படும் யூரியா உரத்தின் அளவு சிறுபோகத்தை விடவும் 76 கிலோ கிராம் அதிகரித்துள்ளது. 01 ஹெக்டேயர் நெற்பயிர்களுக்கு 176 கிலோ யூரியா உரம் வழங்கப்படும் அதேவேளை, 01 ஹெக்டேருக்கு மேற்பட்ட நெற்செய்கைகளுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தின் அளவும் அதிகரிக்கும். தற்பொழுது பொலன்னறுவை போன்ற விவசாயக் குடியேற்றங்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் 02 ஹெக்டேயர் வீதம் விவசாயி ஒருவருக்கு கிடைத்துள்ளதால் அவர்களுக்கு 352 கிலோ கிராம் யூரியா உரம் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பருவ கால நெற் செய்கைக்குத் தேவையான யூரியா உரம் மற்றும் MOP உரம் ஆகிய உரங்களை தேவைப்படும் நேரத்தில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ஏ. எச். எம். எல். அபேரத்ன அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்