விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மேலும் 450 ஏக்கர் காணிகளில் மிளகாயை பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

கமத்தொழில் அமைச்சின் கீழ் வெளிநாட்டு நிதி உதவியில் இயங்குகின்ற கருத் திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டம், எதிர்வரும் ஆண்டில் 450 ஏக்கர் அளவான காணிகளில் மேலும் பல மிளகாய் செய்கையை கருத் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான அளவு மிளகாயை உற்பத்தி செய்வதற்காக இந்த ஆண்டு அதிக நிலங்களில் மிளகாய் பயிரிடும் கருத் திட்டத்திற்கு கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி 03 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 15 ஏக்கர் வீதம் தெரிவு செய்யப்பட்டு மிளகாய் பயிரிடுவதற்கு விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கருத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 450 ஏக்கர் காணிகளில் மிளகாய்ச் செய்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத் த்திட்டத்தின் மூலம் 3600 மெற்றிக் டொன் செத்தல் மிளகாயை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கருத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1600 ஏக்கர் அளவான காணிகளில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மிளகாய்த் தோட்டங்களில் அதிக வளைச்சல் தரும் எம்ஐசிஎச்-1 என்ற ஒரு கலப்பு மிளகாய் இனத்தை விவசாயத் திணைக்களம் ஆராய்ச்சி செய்து அறிமுகப்படுத்தி பயிரிடவுள்ளது. இந்தக் கருத் திட்டம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மற்றும் நாட்டில் நுகர்வுக்கு தேவையான தரத்தில் உயர்ந்த மிளகாயையும் வழங்கும் என்றும் இந்தக் கருத் திட்டம் குறிப்பிடுகின்றது.

 

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்