அக்கறையுடைய எந்த ஒரு தரப்புடனும் நாளை (11) நள்ளிரவு 12.00 மணிக்கு யூரியா உர கேள்வி மனு பற்றி விவாதிக்க கமத்தொழில் அமைச்சர் தயார்...

2022/23 பெரும்போகத்தில் நெற்பயிர்ச் செய்கைக்காக உலக வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட உத்தேச யூரியா உர கேள்வி மனு தொடர்பாக சில தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என கமத்தொழில் அமைச்சு தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த உர ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மற்றும் அக்கறை காட்டும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்தக் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடனும் மற்றும் வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் விவதாம் ஒன்றை நடத்த கம்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலை நாளை அதாவது 2022.10.11 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பத்தரமுல்ல கமத்தொழில் அமைச்சில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மேற்படி குழுக்களை இதில் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்.

இந்தக் கலந்துரையாடல் விவாதத்திற்கும் இலக்குக் கொண்டு நடத்தப்படும் ஒரு கலந்துரையாடல் அல்ல. யூரியா உரத்தை கொள்வனவு செய்யும் நடைமுறையில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை இனங்கண்டு, நாட்டின் விவசாயத்திற்கும் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் இதனை ஒரு தேசிய கரும பணியாக கருதி இந்த நடைமுறை தொடர்பாக யோசனைகளையும் மற்றும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொள்கின்றார்.

எதிர்வருகின்ற பெரும்போகத்தை  வெற்றிகரமாக மாற்றுவது நம் அனைவரின் பொறுப்பாகும். எதிர்வருகின்ற பெரும்போகம் வெற்றிகரமாக அமையவில்லை எனில், தற்போது நாம் எதிர்கொள்கின்ற உணவு நெருக்கடியும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டு நிலைமையும் மேலும் கடுமையாக உக்கிரம் அடையலாம். எனவே, இந்த இக்கட்டான நேரத்தில் இந்த நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும். ஆகையால் அதற்கு நாட்டில் உள்ள அனைவரினதும் ஆதரவு இன்றியமையாததாகும்.

எனவே இந்தக் கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு யூரியா உர கொள்வனவு மற்றும் ஏனைய விவசாய பிரச்சினைகள் தொடர்பிலும் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொள்கின்றார்.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்