இந்தப் பயிர் செய்கை போகத்தில் விவசாயத்திற்கு சேதன உரமாக குளங்களின் மண்ணையும் மற்றும் கழிவுகளையும் யாருக்கும் வழங்க இடமளிக்கப்படாதது என கமத்தொழில் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

2022/23 பெரும்போகத்தில் நெல்லை பயிரிடும் பொருட்டு 70 வீத இரசாயன உரங்களையும் மற்றும் 30 வீத இயற்கை சேதன உரங்களையும் பயன்படுத்த விவசாய திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது. அதன் கீழ் சிறந்த இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிர்ச் செய்கை போகத்தில் குளங்களின் மண்ணையும் மற்றும் கழிவுகளையும் இயற்கை உரங்களாக விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கமத்தொழில் அமைச்சில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான விவசாயத்திற்கான டிஜிட்டல் பயணம் என்ற வரைபடத்தை தயாரிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா ரெலிகம் நிறுவனம் இந்த கலந்துரையாடலை நடத்தியது. இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா ரெலிகம் நிறுவனத்தின் தலைவர் திரு.ரொஹான் பெர்னாண்டோ அடங்கலாக பலரும் கலந்துகொண்டனர்.

அதன் போது நெல்லை பயிரிடுவது தொடர்பான இயற்கை உரக் கொள்கை பற்றி அமைச்சர் விளக்கம் அளித்தார்.

எதிர்வரும் காலங்களில் நெற்செய்கைக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா பணத்தை மானியமாக வழங்க அரசாங்கம் என்ற வகையில் நாம் திட்டமிட்டுள்ளோம். அந்த பணத் தொகை வவுச்சர் வடிவில் வழங்கப்படும். கடந்த காலங்களைப் போல், குளங்களில் இருந்து தோண்டப்படும் மண்ணையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் இயற்கை உரங்களாக விவசாயத்திற்காக விற்பனை செய்ய வாய்ப்பு இருக்காது.

இயற்கை உரங்களை வழங்குவதில் அரசு தலையிடாவிட்டாலும், நாம் இயற்கை உரங்களை முறைப்படுத்துகிறோம். தரமான சிறந்த உரங்களை விவசாயிகள் கமநல சேவை நிலையங்களின் ஊடாக தெரிவு செய்து கொள்ளலாம். இந்த உரத்தைத்தான் பெற வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை. சேதன உர உற்பத்தியாளர்கள் தங்களால் இயன்றதை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். அந்த உரங்களை கமநல சேவை நிலையங்களில் விற்பனை செய்வதற்கு வசதி செய்யப்பட்டும்.

சேதன உரங்களின் தரத்தை கவனித்துக் கொள்ள விவசாயத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தினேன். இயற்கை உரங்களை பாவிக்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்த மாட்டோம். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை வாங்கலாம். நமது நாட்டில் சேதன உரங்களின் தரத்தை அளவிடுவதற்கு இன்னும் சரியான ஒரு முறையியல் கிடையாது. எனவே, சேதன உரங்கள் பற்றிய தர நியமத்தை உடனடியாக தயாரிக்குமாறு தர நியமங்கள் கட்டளைகள் நிறுவகத்திற்கு அறிவுறுத்தினேன்.

நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உயிரியல் உர மானியத்திற்காக 16 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும். விவசாயிகள் இயற்கை உரங்களை வாங்கினால் மட்டுமே அந்த பணம் செலவாகும். எனவே, இந்த பணத்தை யாரும் வீணாக்கவோ, மோசடி செய்யவோ இடமில்லை.

சேதன உரம் தொடர்பாக விவசாயிகள் முறைப்பாடுகளை செய்தால், அந்த நிறுவனத்தை நாம் கறுப்பு பட்டியலில் சேர்ப்போம். கடந்த காலங்களைப் போல் இயற்கை உரங்கள் என்ற போலிக்காரணத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு கழிவுகளை வழங்க இந்த நிறுவனங்களுக்கு இம்முறை இடம் கிடைக்காது என்பதை நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

இன்னொரு விஷயம்தான் 50 கிலோ கிராம் நிறை உடைய ஒரு யூரியா உர உறையை 10,000 ரூபாய்க்கு வழங்குகின்றோம். எனவே யூரியா உரத்தை பாவிக்கும் விவசாயிகளுக்கு தனி மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிலையான விவசாயத் துறைக்கான டிஜிட்டல் பயணம் என்ற வரைபடத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலில், புதிய விவசாய முறைகள், தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற பல வியங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், இந்தக் கருத் திட்டம் பற்றிய ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்