கடந்த சில வருடங்களாக இலங்கையில் எந்தவொரு விவசாயியும் நெற்செய்கையை கைவிடவில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக் காட்டுகின்றது.

விவசாயிகள் நெற்செய்கையை விட்டு வெளியேறுவதாக குறித்த நபர்களும் மற்றும் தனிநபர் குழுக்களும் வெளியிட்டுள்ள செய்திகள் பற்றிய சரியான தகவல்கள் அடங்கிய அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

 அதன்படி, 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நெல்லை பயிரிட்ட எந்தவொரு விவசாயியும் நெற்செய்கையை கைவிடவில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக் காட்டுகின்றது.

2019 சிறுபோகத்தில், இலங்கையில் 308,028 ஹெக்டேயர் அளவான காணிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது மற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை 470,286 ஆகும்.

2019-20 பெரும்போகத்தில் இலங்கையில் 673,928 ஹெக்டேயர் அளவான காணிகளில் நெல் பயிரிடப்பட்டது. விவசாயிகளின் எண்ணிக்கை 901,295 ஆகும்.

2020 சிறுபோகத்தில், 513,755 ஹெக்டேயர் அளவான காணிகளில் பயிர் செய்யப்பட்டுள்ளது மற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை 840,487 ஆகும்.

2020-21 பெரும்போகத்தில், 777,915 ஹெக்டேயர் அளவான காணிகளில் பயிர் செய்யப்பட்டுள்ளது மற்றும் 11,52,503 விவசாயிகள் நெல் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 2021 சிறுபோகத்தில் 526,698 ஹெக்டேயர் அளவான காணிகளில் நெல் பயிரிடப்பட்டது. நெல் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 833,892 ஆகும்.

இந்த ஆண்டின் மிக அண்மிய பயிர் செய்கை போகமான 2022 சிறுபோகத்தில் 512,000 ஹெக்டேயர் அளவான வயல் காணிகளில் நெல் பயிரிடப்பட்டது. அரசாங்கம் யூரியா உரங்களை வழங்கத் தொடங்கிய பின்னரே, 490,515 விவசாயிகள் நெற் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களால் பயிரிடப்பட்ட நெல் அளவு 304,734 ஹெக்டேயர் ஆகும். இந்த அளவு யூன் மாதத்தின் முதல் வாரத்திற்கு பின் அதாவது யூரியா உரம் இடும் பணி ஆரம்பமாகிய பின்னர் பயிரிடப்பட்ட அளவாகும்.

ஆனால் யூரியா உரங்களை விநியோகிக்க முன்னர், 248,000 ஹெக்டேயர் அளவான வயல் காணிகளில் நெல் பயிரிடப்பட்டது. நெற் பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படும் நெற் பயிர்களின் அளவிலோ, நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கையிலோ எவ்வித குறையும் இல்லை என விவசாய அபிவிருத்தி திணைக்களம் கூறுகின்றது. மேலும், இதுவரை சிறுபோகத்தில் அதிகளவு நெல் பயிரிடப்பட்டிருப்பது 2022 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பதிவாகியுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெல் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதாக குறித்த தனிநபர்களினதும் குழுக்களினதும் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை.

நெற் பயிர்ச் செய்கை மேற்கொண்ட சில விவசாயிகள் வயோதிபத்தை அடைந்ததன் காரணமாக விவசாயப் பணிகளை பிள்ளைகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சில வயதான விவசாயிகள் நோய்வாய்ப்படுவதாலோ அல்லது இறப்பதாலோ விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றார்கள் என்பது முற்றிலும் பொய்யானது என விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிடுகின்றது.

 

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்