நாட்டின் மிளகாய்க்கான தேவையில் 21.2 வீதத்தை பூர்த்தி செய்ய விவசாய நவீனமயமாக்கல் கருத் திட்டம் தயாராக உள்ளது.

நமது நாட்டின் மொத்த மிளகாய்த் தேவையில் 21.2 வீதத்தை கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஒரு வெளிநாட்டு உதவிக் கருத் திட்டமான விவசாய துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் (ASMP- AGRICULTURE SECTOR MODERNIZATION PROJECT) கீழ் ஆரம்பிக்கப்பட்ட மிளகாய் தோட்டங்கள் மூலம் வழங்க முடியும் என அந்த கருத் திட்டம் தெரிவிக்கின்றது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுராதபுரம் தலாவ கடகல பிரதேசத்தில் வெற்றிகரமான மிளகாய் தோட்டங்களை காண ஊடகவியலாளர்கள் குழுவொன்று அப்பகுதிக்கு சென்றிருந்தது.

இலங்கையில் வருடாந்த மிளகாயின் தேவை சுமார் 5000 மெற்றிக் டொன்களாகும். இந்த வருடத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்த செத்தல் மிளகாயின் அளவு 28.612 மெற்றிக் டொன்களாகும். அதற்காக அரசாங்கம் 18,556 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இந்த நாட்டில் பெரும் தொகையை மீதப்படுத்தும் வகையில், மிளகாய் பயிரிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கவும், மிளகாய் விளைச்சலுக்கு தேவையான புதிய தொழில் நுட்பத்தையும் மற்றும் உபகரணங்களையும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தவும் விவசாய நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் கருத் திட்டமானது அனுராதபுரம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இதுவரை 1600 ஏக்கரில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.

அதன் கீழ் 3500 விவசாயிகளுக்கு மிளகாய் செய்கைக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களால் உற்பத்தி செய்யப்படும் செத்தல் மிளகாயின் அளவு 12,800 மெற்றிக் டொன்களாகும். இது நமது நாட்டின் மொத்த மிளகாய் தேவையில் 21.02 வீதமாகும்.

குறைந்தளவு இரசாயன உரங்களையும் மற்றும் விவசாய இரசாயன பதார்த்தங்களையும் பயன்படுத்தி பயிரிடப்படும் இந்த மிளகாய் பயிர்கள் மூலம் ஒரு விவசாயி அரை ஏக்கரில் இருந்து 1.4 மில்லியன் முதல் 02 மில்லியன் ரூபா வரை சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

விவசாய நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் மூலம் இந்த பயிர்ச் செய்கைப் போகத்தில் மேலும் 200 ஏக்கர் அளவான காணிகளில் மிளகாய் விளைச்சலை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தொழில் நுட்பத்தை யபன்படுத்தி மிளகாய் பயிரிடுவதால் விவசாயிகள் செழிப்பு பெற்றுள்ளதாகவும், ஒரு ஏக்கரில் மிளகாய் பயிரிடும் விவசாயிக்கு 6 மாதத்தில் 50 முதல் 74 இலட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் கருத் திட்டத்தின் பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Video

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்