த்ரிப்பிட்டகாபி யாத்திரிகை வாரத்தை முன்னிட்டு கமத்தொழில் அமைச்சில் விஷேட நிகழ்ச்சித் திட்டங்கள்

த்ரிப்பிட்டகாபி யாத்திரிகை வாரத்தை முன்னிட்டு கமத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்ச்சித் திட்டம் 2019.03.22 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. சமய வழிபாடுகளின் பின்னர், உறுதிமொழி உரைத்து இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  விருது பெற்ற கலாநிதி சுமனபால கல்மங்கொட அவர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், அங்குரார்ப்பண உரையை நிகழ்த்தினார்கள். அபிநயனத்தையும்  மொழியையும் உரிய முறையில் கற்பதனூடாக, இன்று தோன்றியுள்ள அர்த்தமற்ற பாடல்கள், காவியங்கள், பல இலக்கிய படைப்புகள் என்பவற்றை மிகவும் மக்கள் நேயமானதாக மாற்ற முடியும் என கலைஞ்சர் கல்மங்கொட அவர்கள் குறிப்பிட்டார்கள். ஒரு கலை என்ற ரீதியில், அதனூடாக சமூகத்திற்கு பயனளிக்கும் விடயங்களை மேற்கொள்வதிலுள்ள காலத்திற்கு ஏற்ற தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும், அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் இந்த விஷேட வேலைத் திட்டத்தை தேசிய மக்கள் என்ற ரீதியில் பாராட்ட வேண்டும் எனவும், இந்த நிகழ்ச்சித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுதிலும் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள். இந்த நிகழ்வின் போது, அமைச்சின் பாடல் குழுவினால் பாடல்கள் இசைக்கப்பட்டன.  

 

இந்த நிகழ்வில், கமத்தொழில் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன்சந்திர அவர்கள் அடங்கலாக அமைச்சின் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2019 07:48

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்