சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும் அந்தப் புழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் பற்றிய அறிக்கையை வாராந்தம் எழுத்தில் பிரதமருக்கு சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சருக்கு அறிவுறுத்தல்

சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும் அந்தப் புழுவால் பயிர்கள் அழிந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் வாராந்தம் பிரதமருக்கு எழுத்தில் அறிக்கையிடுமாறு பிரதமர் அவர்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கன்னொறுவ தேசிய விவசாய தகவல்கள் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய உத்தியோகத்தர்களை சந்தித்த போது அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

 சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும் அந்தப் புழுவால் பயிர்கள் அழிந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் வாராந்தம் பிரதமருக்கு எழுத்தில் அறிக்கையிடுமாறு பிரதமர் அவர்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கன்னொறுவ தேசிய விவசாய தகவல்கள் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய உத்தியோகத்தர்களை சந்தித்த போது அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

 அந்தப் புழுக்களினால் பயிர்கள் அழிவுக்குள்ளாகிய விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுப்பதை துரிதப்படுத்துமாறு அமைச்சரினால் உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிரதமரினால் நிதி அமைச்சுக்கு துரிதமாக நிதிகளை ஒதுக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 ஒரு சில செய்திப் பத்திரிகைகளில் சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்துவதற்கான தேவை உள்ளது என வேண்டுகோள் விடுத்துள்ள எந்த ஒரு நபருக்கும் இது தொடர்பில் தலையீட்டு அத்தகைய தேவையை நிறைவு செய்து கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஊடக நிறுவனம் செய்த செயற்பணி அமைச்சரினால் பாராட்டப்பட்டது.

 இந்தப் புழுவை கட்டுப்படுத்துவதற்கு 5 இரசாயன பதார்த்தங்கள் ஏற்கெனவே சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் தேவையான இயற்கை முறையியல்கள் பின்பற்றப்படுமாயின், அத்தகைய முறையியல்கள் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பாக அமையாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இது வரை கமத்தொழில் அமைச்சினால் சேனா என்றழைக்கப்படும் அந்தப் புழுவை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றங்சாட்டப்பட்டுள்ளமைக்கு அசமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘விவசாயத் திணைக்களம் எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளவில்லை என, ஒரு சிலர் ஊடகங்களுக்கு முன்வந்து கூறுகின்றனர். அவ்வாறு சொல்வது நாங்கள் புளியம் பழங்களை கொண்டுவரவில்லை என்பது போலவே. நான் கமத்தொழில் விடய அமைச்சராக எனது பணியை பொறுப்பேற்றது முதல் நானும் எனது அமைச்சின் அலுவலர்களும் இந்தப் புழுவை கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கு கடும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். அதே போன்று, இப்பொழுது கூறுகிறார்கள் இந்தப் புழு சோளத்திலிருந்து நெற் பயிர்களுக்கும், நெற் பயிர்களிலிருந்து பருப்பு வகை தானியப் பயிர்களுக்கும், அத்தகைய தானியப் பயிர்களிலிருந்து சிங்கராஜ வானந்திரத்திற்கும் பரவி வருகின்றது என்று. சிலர் கூறுகின்றார்கள் இவை அனைத்தையும் தீ இட்டு அழிக்க வேண்டும் என்று. இதை மையமாக வைத்து ஒரு சிலர் நாட்டில் தீ மூட்டுவதற்கு முற்படுகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஒரு சிறப்புச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இரசாயன கம்பனிகள் இந்தப் புழுவை கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கு என அமைச்சுக்கு இரசாயனப் பதார்த்தங்களை தொகையாக கொண்டு வருகின்றன. இந்த சூழ்ச்சியை எமக்கு நன்றாக தெரியும். சேனா என்றழைக்கப்படும் இந்தப் புழுவை கட்டுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களமும் மற்றும் நாமும் பொறுப்புடன் செயற்படுவோம்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன் சந்திர, கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு டப்ளியூ.எம்.டப்ளியூ. வீரகோன் ஆகியோர் அடங்கலாக விவசாய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 01 பிப்ரவரி 2019 08:13

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்