
விவசாயக் கல்லூரிகளில் NVQ மட்டம் 5 மற்றும் மட்டம் 6 ஆகிய தகைமைகளைப் பூர்த்தி செய்த 490 உயர் டிப்ளோமாதாரிகளுக்கும் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கும் டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு இன்று (16) பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற குண்டசாலை விவசாயக் கல்லூரியின் அதிபர், "விவசாயத் துறைக்கு ஒரு விவசாயக் கல்லூரி அமைப்பு உள்ளது, ஆனால் விவசாயத்தில் நடைமுறை பயிற்சி அளிக்கும் அத்தகைய நிறுவனங்கள் வேறு நாடுகளில் கிடையாது" எனக் கூறினார்.
விவசாயத் துறைக்கு அறிவு, திறன் மற்றும் நடைமுறைச் சாத்தியமுள்ள ஒரு குழுவை உருவாக்க இந்த டிப்ளோமாதாரர்கள் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர் என விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணிம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. விக்ரமசிங்க, இந்த டிப்ளோமாதாரர்கள் விவசாயத் துறையில் எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளிக்கத் தேவையான இளமை ஆற்றலைக் கொண்டுள்ளனர் எனக் கூறினார்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“வேலை செய்ய எனக்கு ஒருபோதும் சான்றிதழ்கள் தேவையில்லை. சான்றிதழ்கள் அவசியம். ஆனால் சில நேரங்களில் சான்றிதழ்கள் தேவையில்லை. ஒருவர் 50 வயது என வைத்துக்கொள்வோம். அவர் அதை விட பத்து மடங்கு வாழ்ந்தால், அவர் ஐநூறு ஆண்டுகள் வாழ்வார். ஒரு நபர் 500 ஆண்டுகள் வாழும்போது வழக்கமாகச் செய்யும் வேலையை நான் செய்துள்ளேன். அதனால்தான் இளைஞர்களுக்கு சவால் விடுகின்றேன் என்று கூறினேன்.
நான் பல கல்வி நிறுவனங்களுக்குச் சென்றிருக்கின்றேன். நான் சென்ற ஆறாவது கல்வி நிறுவனம் எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த ஆறாவது கல்வி நிறுவனம் அனுராதபுரத்தில் உள்ள மல்வத்து ஓயாவின் கரையில் அமைந்திருந்தது. அங்குதான் நான் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக வளர்க்கப்பட்டேன். அந்தப் பாடசாலையில், நாங்கள் தரையில் அமர்ந்து படித்தோம். அதற்கு முன்பு, நான் 5 கல்வி நிறுவனங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எதற்காகப் படிக்கின்றோம் என அதிபர் எங்களிடம் கேட்டார். நாங்கள் எதற்காகப் படிக்கின்றோம் என நினைக்கிறீர்கள்? அதிபர் தானே பதில் அளித்தார். உலகைப் புரிந்துகொள்ளவே நாங்கள் படிக்கின்றோம். இந்தப் பாடத்தைப் படித்த பின்னர் நீங்கள் என்ன செய்தீர்கள்? பாடசாலையில் நீங்கள் தனித்தனியாகக் கற்றுக்கொண்ட விடயங்களை ஒன்றாக இணைக்கும்போது, உலகைப் புரிந்துகொள்ள முடியும். இப்போது உங்களிடம் விவசாயத்தில் ஒரு படம் உள்ளது. மேலும் உங்களின் மனதில் மக்களின் விம்பமும் இருக்க வேண்டும்.
சீனாவைக் கட்டியெழுப்புவதற்கு அடிக்கல் நாட்டிய தத்துவஞானி மாவோ சேதுங், உலகை அறிவதில் எமது ஒரே நோக்கம் உலகை மாற்றுவதுதான் என கூறுகின்றார். எனவே, இருக்கும் விவசாயத்தைப் பராமரிப்பது உங்கள் வேலையாக இருக்கக்கூடாது. அதை மாற்றுவதே உங்கள் வேலையாக இருக்க வேண்டும். இந்தப் பாடநெறிக்கென, எமது நாட்டு பொதுமக்கள் உங்களுக்காக ஆண்டுக்கு 6 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர். இந்தப் பாடநெறி 2 வருடங்களுக்கானது என்றால், அது 12 ரூபாய். நீங்கள் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். எமக்காக இந்த மிகப்பெரிய தியாகத்தைச் செய்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலவழித்த செல்வத்திற்காக, நீங்கள் சேவை செய்ய வேண்டும்.
உலகை சிறப்பாக மாற்ற நாம் புரிந்து கொள்ள வேண்டும். புதிய விடயங்களை உருவாக்காத ஒரு நாடு உலகில் உயராது. ஒவ்வொரு துறையிலும் புதிய விடயங்களை உருவாக்க வேண்டும். அரசியலை மாற்றுவதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பொறுப்பேற்க அமைச்சுகளுக்கு சென்றோம். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கையெழுத்திட்டோம். நடனக் கலைஞர்கள் இல்லை. டிரம் பீட்கள் இல்லை. நான் அமர வேண்டிய நாற்காலியும் ஒரு உயர்ந்த நாற்காலிதான். கலாச்சாரம் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். எமக்கு முன் வருபவர் குடிமகன் அல்ல. சமமானவர் அல்ல. எமக்கு முன் வருபவர்களை அவமானப்படுத்துவதற்காக நாற்காலியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் நாற்காலியை மாற்றினேன். எமது நாடு இன்னொரு மனிதனை மனதளவில் கீழ்ப்படுத்துவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி முதல் முன்னாள் ஜனாதிபதிகள் வரை மக்களின் செல்வத்திலிருந்து பயனடையும் சலுகையை நாங்கள் ஏற்கனவே ஒழித்துவிட்டோம். ஒரு நாள், ஒரு சட்டத்தரணிக்கும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் நடந்தது. அந்த விடயத்தில், யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் சட்டம் செயற்படுத்தப்படும்.
இந்த டிப்ளமோ சான்றிதழைப் பெறுவதன் மூலம் நீங்கள் விவசாயத் துறையை மாற்றுவதாக கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் புதிய விடயங்களைச் செய்கின்றீர்கள் என கற்பனை செய்து பாருங்கள். உங்களின் உழைப்பை அள்ளிக்கொடுங்கள். உழைப்பை மதிக்கும் ஒரு அரசாங்கம் உள்ளது. உங்களது உழைப்பின் பங்கிற்கு நீங்கள் தகுதியானவர். டிப்ளமோ பெற்ற உங்களுக்கு உலகை மாற்றும் வலிமை கிடைக்கட்டும்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் திரு டபிள்யூ.பி. விக்ரமசிங்க, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமராச்சி, விவசாயக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.