
வடமத்திய மாகாண மகா எல கருத் திட்டத்தின் கீழ், மொரகஹகந்த களு கங்கை நீர்த்தேக்கம் வழியாக வடமத்திய மாகாணத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகின்றது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து மகாகனதராவ வரை முதல் கட்டமாக இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிர்மாணத்தின் ஒரு பகுதியாக, வினாடிக்கு 40 கன மீற்றர் அளவான தண்ணீரைக் கொண்டு செல்ல 7.6 மீற்றர் விட்டமுடைய ஒரு சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகின்றது. இது அனுராதபுரம் மாவட்ட மக்களுக்கு குடிநீரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 12,500 ஹெக்டேயர்களுக்கு நீர்ப்பாசன நீரை வழங்குவதன் மூலம் பல விவசாய குடும்பங்கள் இந்தக் கருத் திட்டத்தின் மூலம் பயனடையும்.
மொரகஹகந்தாவில் இருந்து மகாகனதரா வரை 95.8 கிலோ மீற்றர் நீளமுள்ள கால்வாய் உருவாக்கப்படும். அதில் 27.7 கிலோ மீற்றர் வனவிலங்கு சரணாலயங்களைப் பாதுகாக்க சுரங்கப்பாதையாக அமைக்கப்படும். அதன்படி, சுற்றாடலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைத்து இந்தக் கருத் திட்டம் செயல்படுத்தப்படும். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கருத் திட்டத்தை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 64.5% பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற திட்டத்தின் தொடக்கத்திலிருந்து எதிர்கொள்ளப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்தக் கருத் திட்டம் தொடர்ந்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
வடமத்திய மாகாண மகா எல கருத் திட்டத்தை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த இன்று (14) பார்வையிட்டார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இந்தக் கருத் திட்டம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
"இந்தக் கருத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், மொரகஹகந்தவிலிருந்து வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மகாகந்தரா குளத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதாகும். அடுத்தது வயம்ப மஹா எலக் கருத் திட்டம். இன்று இங்கு சுரங்கப்பாதையை நாங்கள் கவனித்தோம். இது தெற்காசியாவின் மிகப்பெரிய கருத் திட்டங்களில் ஒன்றாகும். 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதை நிறைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கருத் திட்டத்தை உமா ஓயா போன்ற ஒரு திட்டத்துடன் ஒப்பிடும் போது, இந்தக் கருத் திட்டத்தால் ஏற்படும் சுற்றாடல் சேதமும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் மிகக் குறைவு. நிலகீழ் நீரில் ஏற்படும் பாதிப்பு கூட மிகக் குறைவு. உள்ளே இருந்து அகற்றப்படும் கற்களையும் மற்றும் பிற பொருட்களையும் என்ன செய்வது என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை. அவற்றை நாட்டின் பிற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். இதை நாங்கள் ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் வைத்திருக்கிறோம். நாங்கள் அதை அகற்ற வேண்டும். இதை ஒரு சிறந்த வளமாக மாற்றக்கூடிய முதலீட்டாளர்கள் எங்களுக்குத் தேவை. தற்போது, சிறிய அளவில் இந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். அதை எடுத்துக்கொள்வது இந்தக் கேள்விக்கு பதிலளிக்காது. எனவே, நாட்டிலுள்ள தொழில்முனைவோர் இதைப் பற்றி ஆராயுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த சுரங்கப்பாதை பணியை மிக விரைவில் நிறைவு வேண்டும்”