
உள்நாட்டுப் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு தேசிய நிகழ்ச்சித் திட்டமான "கிரி இத்திரென ரட்டக்" என்ற கருப்பொருளின் கீழ் செயற்படுத்தப்படும் "பால் உற்பத்தி நிலைய" நிகழ்ச்சித் திட்டம், இன்று (8) கமத்தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பால் பண்ணையாளர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய கேந்திர நிலையத்தின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண, இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் பற்றி, கலந்து கொண்டவர்களுக்கு விளக்கினார். பின்னர், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பாலிகா பெர்னாந்து, பால் பண்ணை கேந்திர நிலைய நிகழ்ச்சித் திட்டத்தில் அமைச்சரின் பங்கு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். பால் பண்ணை நிலைய நிகழ்ச்சித் திட்டத்திற்கான நிதி ஏற்பாடுகளை ஈடுசெய்வதற்கு, ஆண்டுக்கு ரூ. 3000 மில்லியன் தேவைப்படுகின்றது. அமைச்சின் திறைசேரிப் பணமும், மாகாண சபைகளின் திறைசேரிப் பணமும் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் திறைசேரிப் பணமும் தேவைப்படுவதாக இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.
‘கிரி இத்திரரென ரட்டக்’ என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 12 மாவட்டங்களையும் மற்றும் 201 கால்நடை பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பால் பண்ணை கேந்திர நிலையம் தாபிக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் நிமித்தம் ஒரு செயற்படுத்தக்கூடிய ஐந்தாண்டு திட்டம் தயாரிக்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை மாதாந்த அடிப்படையில் கண்காணித்து பின்தொடர் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பால் பண்ணை கேந்திர நிலைய நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பால் பண்ணை கேந்திர நிலைய எண்ணக்கருவின் செயற்பாடுகள் பற்றி அமைச்சின் கால்நடை திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் எச்.எச்.ஏ. சிசிர பியசிறி விளக்கினார். இந்த திரவ பால் உற்பத்தி துறையில் பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளையும் மற்றும் கஷ்டங்களையும் நடைமுறை ரீதியில் நிவர்த்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படை இலக்குகள் பற்றி டாக்டர் பியசிறி கருத்து தெரிவித்தார். அதன்படி, பின்வரும் இலக்குகளை அடைய எதிர்பார்க்கப்படுகின்றது: இப்பகுதியில் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு இடையில் துணைப் பயிராக புல் வளர்ப்பை பிரபலப்படுத்துதல், விலங்குகளின் செயல்திறனை அதிகரித்தல், கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பம், விலங்கு நோய் கட்டுப்பாடு, தூய பால் உற்பத்தி மற்றும் பெறுமதி சேர்த்தல், இலாபம் மற்றும் நட்டம், பண்ணை பகுப்பாய்வு மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல் முதலிய அம்சங்கள் இதில் அடங்கும்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு மஹிந்த ஏகநாயக்க அவர்கள் கால்நடைகளின் வளர்ச்சியில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பங்களிப்பு பற்றி விளக்கினார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பால் பண்ணை கேந்திர நிலைய நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்குகளை அடைவது சுலபமான ஒரு பணியாக இருக்கும் என அவர் கூறினார். இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றியைப் பாராட்டியவாறு, கால்நடை மருத்துவர்களினதும் மற்றும் அரசியல் அதிகாரிகளினதும் கருத்துக்கள் ஒத்துப்போகும் ஒரு பொன்னான வாய்ப்பு இதுவாகும் என டாக்டர் ஏகநாயக்க கூறினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்தார்கள்.
"இதுவரை எல்லா தத்துவஞானிகளும் உலகைப் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் உலகை மாற்றுவதே எமது பணி" என கார்ல் மார்க்ஸ் கூறினார். எல்லோரும் அதை ஒருவருக்கு விளக்க அதிகம் பாடுபட்டிருக்கின்றார்கள். ஆனால் பணி உலகை மாற்றுவதுதான். பரிவர்த்தனையாகும் விடயத்தில் எமது நாடு கணிசமான பலவீனத்தைக் கொண்டுள்ளது.
"உழைப்புதான் மனிதனைப் படைத்தது" என எங்கெல்ஸ் கூறினார். அதாவது மனிதன் ஒரு நோக்கத்துடன் படைக்கப்பட்டான். வேறு விதமாக கூறுவதானால், உற்பத்திக்காக. உற்பத்தியில் தலையிடும் நோக்கத்துடன் மனிதன் படைக்கப்பட்டான் எனலாம்.
அரசாங்க உத்தியோகத்தர்களுடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டு இந்த பணியை செய்ய முடியாது. இங்கு எமக்கு இருக்கும் சவால் என்னவென்றால், விவசாயிகளுடனும் உத்தியோகத்தர்களுடனும் இணைந்து பணியாற்றுவதுதான். நாம் முடிந்தவரை உற்சாகமாகவும் திறமையாகவும் இருக்க வேண்டும். மனித வளங்களை நிர்வகிக்கும் முகாமையாளர்கள்தான் எமது நாட்டிற்குத் தேவை. அவர்கள்தான் தலைவர்களாக மாறுகின்றார்கள். "எம்மால் முடிந்தால், அதனை செய்வோம். முடியாவிட்டால், எப்படியும் அதனை செய்வோம்." அரசாங்க சேவையில் வசதிகள் குறைவு. அது உண்மைதான், ஆனால் இப்போது அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் எமக்கு இருக்கின்றது.
முடியாது, முடியாது - இதனை அவரோடு செய்ய முடியாது. அப்படிப் பேசுவதில் அர்த்தமில்லை. எமது அமைச்சில் உள்ள எந்த உத்தியோகத்தருடனும் என்னால் பணியாற்ற முடியும். உரிய இடத்தில் நாம் தலையிட்டு இந்த கருத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து நிறைவேற்ற வேண்டும். புல்லை ஒரு பயிராக வளர்க்க வேண்டும் என கூறும் ஒரு கலாச்சாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும். உரிய பகுதியில் உள்ள விவசாய உத்தியோகத்தர்களுடன் இணைந்து புல்லை ஒரு பயிராக வளர்ப்பதில் நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டும். இதில் தனியார் துறையும் ஈடுபடுதல் வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில், தேவையான தலையீடுகளை நாம் செய்வோம்.
"பத்து மாடுகளை வைத்து பண்ணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் கிடையாது. பத்து தொழில்கள் மட்டுமே உள்ளன. அவற்றால் சோர்வடைபவர்கள் மட்டுமே விவசாயத்தின்பால் திரும்புகின்றார்கள். விவசாயிகள் மதிக்கப்படுவதில்லை. விவசாயத்தை பொருளாதார ரீதியில் சாத்தியமான தொழிலாக மாற்ற முடியும். தலையிட்டு இந்தப் பணியில் நாம் வெற்றி பெறுவோம்."
இந்த நிகழ்வில் மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மிருக மருத்துவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
