
தெற்காசியாவின் மிகப்பெரிய அக்வாபோனிக் (Aquaponic) தொழில்நுட்ப பசுமை இல்லம், ரூ. 100 மில்லியன் மானியத்திலும் மற்றும் ரூ. 2 பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டிலும், உலக வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் ஆதரவுடன், ஆராச்சிகட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குமரகட்டுவ கிராமத்தில் 18 ஏக்கர் நிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது இப்போது கைவிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் விஷேட கவனம் செலுத்திய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள், மறுநாள் அங்கு கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இணைந்தார்கள்.
இந்த தொழில்நுட்ப பசுமை இல்லம் மீன்களுக்கு அதிக புரத உணவை வழங்குகின்றது. மேலும் கழிவுநீர் உயிரியல் செயற்பாட்டில் நைட்ரேட்டுகளாக மாற்றப்பட்டு குளங்களில் விடப்படுகின்றது. தாவர வேர் அமைப்பு தண்ணீரில் உள்ள நைட்ரேட்டுகள் மற்றும் பிற தாதுக்களை உறிஞ்சி சுத்தமான தண்ணீரை மீன்வளத்திற்குத் மீளக்கொடுக்கின்றது.
இந்த கருத் திட்டத்தின் கீழ், மீன் மற்றும் தாவர வளர்ப்பு நடவடிக்கைகள் 8 மாத காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டன. பல சர்வதேச தரநியமங்கள் மற்றும் அனைத்து இணக்கங்களையும் கொண்ட ஒரு கருத் திட்டமாக, இந்தக் கருத் திட்டம் மாதத்திற்கு 20,000 முதல் 30,000 கிலோகிராம் வரை உற்பத்தி செய்தது. எனினும், 2021-2022 பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டிற்கு விதைகளையும் மற்றும் மீன் தீவனங்களையும் இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளைப் பெறுவது சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தாமதமானது. உற்பத்தி திறன் 10% மட்டுமே. அதிக செலவில் செயற்படுத்தப்பட்டாலும், அரசாங்கத்திடமிருந்து சரியான கவனம் இல்லாததால் இந்த மதிப்புமிக்க கருத் திட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தக் கருத் திட்டத்தின் ஆய்வு விஜயத்தில் இணைந்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, இந்தக் கருத் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதாகக் கூறினார்.