
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஒன்றிணைந்த நீர் முகாமைத்துவ கருத் திட்டம் (CRIWMP) தொடர்பான காலநிலை நடவடிக்கை 2025 கருத்தரங்கு இன்று (30) கொழும்பில் உள்ள ஸ்ரீரங்கம் ஹோட்டல் வளாகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
காலநிலை மாற்ற தழுவலுக்கான ஒன்றிணைந்த நீர் முகாமைத்துவ கருத் திட்டம் அல்லது குள கம் புபுதுவ என்பது எல்லங்கா முறைமைகளின் 03 உலர் வலய ஆற்றுப் படுகைகளில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய 8 ஆண்டு காலப்பகுதியில் செயற்படுத்தப்பட்ட ஒரு கருத் திட்டமாகும். குள கம் புபுதுவ திட்டம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் உலர் வலய கிராமப்புற குளங்களில் உள்ள நெல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதையும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் அவர்கள், கருத் திட்டத்தின் வெற்றிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
"எனது கருத்துப்படி, இந்த கருத் திட்டம் ஒரு வெற்றிகரமான ஒருத் திட்டமாகும். நான் மக்களிடம் இந்தக் கருத் திட்டம் பற்றி பேசினேன். மக்கள் இந்த கருத் திட்டத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார்கள். எமது நாட்டில் ஒரு கருத் திட்டம் வெற்றிபெற, ஒரு நல்ல பணிப்பாளரும், நல்ல ஊழியர்களும் தேவை. இந்த கருத் திட்டம் ஊழியர்கள் மிகவும் திறமையாக கையாண்டுள்ளார்கள். மேலும், கிராம சேவகர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நீர்ப்பாசன உத்தியோகத்தர் ஆகியோரால் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. ஒரு கருத் திட்டத்தை வெற்றிகரமாக்க, அரச அதிகாரிகள் சிறப்பாக தொழிற்பட வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு கருத் திட்டம் வெற்றிபெறும்போது அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவது கடினம். ஆனால் "குள கம் புபுதுவ" நகிழ்ச்சித் திட்டம் அந்த சவாலை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. கருத் திட்டத்தை கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பதும் முக்கியம். மக்களின் வாழ்க்கை, அன்றாட பழக்கவழக்கம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்த கருத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
எமது நாடு குளங்களால் சூழப்பட்ட ஒரு நாடு அழைக்கப்படுகின்றது. நாங்கள் குளங்களைத் தோண்டுவதில்லை. குளங்களை நிரப்புகிறோம். அவர்கள் குள கிராம புபுதுவ நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்தியபோது, அவர்கள் குளத்தைப் பற்றிய நல்ல புரிதலுடன் செயற்பட்டார்கள். குளக் கரையால் சூழ்ந்த பகுதியை மீண்டும் பயிரிடுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். விலங்குகள் அங்கு வரும்போது, அந்த விலங்குகளின் உயிர்வாழ்வு பாதுகாக்கப்படுகின்றது.
"ஒரு குளம் என்பது ஒரு பெரிய முறைமை. ஒரு தாவர முறைமை. ஒரு விலங்கின முறைமை. அந்த முறைமைகள் "குளக் கிராம புபுதுவ" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டன. இவை அனைத்தையும் பற்றிய விழிப்புணர்வுடன் இந்த கருத் திட்டம் செய்யப்பட்டதையும், மக்கள் அதன் நன்மைகளை அனுபவித்து வருவதையும் நான் கண்கூடாக் கண்டேன். சுற்றாடல் சமநிலை மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கருத் திட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மற்றொரு கருத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த இதில் பெற்ற அனுபவம் முக்கியமானது."
இந்த நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் திரு டி.பி. விக்ரமசிங்க மற்றும் கருத் திட்ட அதிகாரிகள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.