
நீர்ப்பாசன பொறியாளர்கள் சங்கத்தின் 49-வது வருடாந்த மாநாடு இன்று (04) நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது சங்கத்தின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் டி.பி. விக்ரமசிங்க, நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர மற்றும் பொறியாளர்கள் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


