
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாயம் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் முகமாக 500 மில்லியன் ரூபா சலுகைக் கடன் வழங்கும் திட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (01) கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, இந்த நிகழ்ச்சித் திட்டம் விவசாயத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்போது தொழில்முனைவோர் நிதி சிக்கல்களை எதிர்கொண்டால், இந்த கடன் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தேவையான நிதி உதவியை வழங்க முடியும் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார். இந்த சலுகை கடன் நிகழ்ச்சித் திட்டத்தில் அறவிடப்படும் நான்கு சதவீத வட்டி நிர்வாக செலவுகளுக்கு மட்டுமே அறவிடப்படும் எனவும் அவர் கூறினார்.
கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அவர்களுக்கு அவரின் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்தார்.
"எமது உற்பத்தி செயல்முறையை வலுப்படுத்த பல நிகழ்ச்சித் திட்டங்களை நாம் திட்டமிட்டுள்ளோம். குறைந்த நிலத்தில் அதிக விளைச்சலை பெறவும், குறைந்த பூச்சிநாசினிகளின் பாவனையை அடையவும், அதிக விளைச்சலை தருகின்ற சிறந்த விதைகளை வழங்கவும், மண்ணை்ப பரிசோதித்து மண்ணுக்கு ஏற்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தவும், தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். குறிப்பாக, நீர்ப்பாசன முறையை மீட்டெடுப்பதற்கான பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்."
குறிப்பாக இளம் தொழில்முனைவோரை விவசாயத் துறைக்கு ஈர்க்கும் வகையில் தலையீடுகளைச் செய்யவும் நாம் திட்டமிட்டுள்ளோம். திருமண விழாக்களின் போது யாரும் விவசாயியைத் தேடுவதாகவில்லை. இன்று, இளைஞர்கள் தம்மை விவசாயிகள் என கூறுவதற்குவெட்கப்படுகின்றார்கள். இந்த மனநிலையை அகற்ற வேண்டும். நாம் ஒரு நேர்த்தியான விவசாயியை உருவாக்க வேண்டும்.
விவசாயியை ஒரு தொழில்முனைவோராக மாற்ற வேண்டும். விவசாயத் துறையில் இருந்து அதிக வருமானம் கிடைத்தால், நல்ல சலுகைகள் இருந்தால், சந்தைப் பிரச்சினைகள் பற்றிய புரிந்துணர்வு இருந்தால், தொழில்முனைவோராக உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற நம்பிக்கையுடன் இளைஞர்கள் விவசாயத்தின் பக்கம் சாய்ந்துள்ளனர்.
” ஒரு ஆரம்ப கட்டமாக, இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை தேர்ந்தெடுத்து விவசாயத் துறை தொடர்பான பல்வேறு கருத் திட்டங்களின் ஊடாக அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இந்தக் கடன்களை வழங்குவோம். இந்தக் கடன் வசதியைப் பெறுபவரை ஒரு தொழில்முனைவோராக முன்னோக்கிக் கொண்டுவருவதே எமது குறிக்கோளாகும்.
விண்ணப்பப் படிவம் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்படும். மேலும் செய்திப் பத்திரிகைகளிலிருந்தும் மற்றும் ஊடகங்களிலிருந்தும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். 4% வரை குறைந்த வட்டி விகிதத்தில் சலுகைக் கடன்களை வழங்குவதன் மூலம் விவசாயத் துறையை மிகவும் மேம்பட்ட சிலைக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திரு ஆர்.எம்.என். ஜீவந்த, மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திரு எஸ்.என்.பி.எம்.டபிள்யூ. நாராயண, பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் திரு டி.எம்.டி.எஸ். குமார ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
