விவசாயத் திணைக்களத்தால் செயற்படுத்தப்படும் தேசிய நெற் களைகள் கட்டும் வாரம், 2025 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று (24) காலை எலகமுவ 2 எல கும்புராய, பொல்பிதிகம, ஹக்வதுனாவ ஆகிய விவசாய ஆலோசனைப் பிரிவுகளில் கமத்தொழில் மற்றும் கால்நடைகள் பிரதி அமைச்சர் திரு நாமல் கருணாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தற்போது, இந்த நெற் களை நெல் பூச்சி இலங்கையில் நெல் வளரும் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது. நெற் களை பூச்சி நெல் விளைச்சலை கடுமையாக பாதித்துள்ளது. நெற் களையை கட்டுப்படுத்துவதில் துரித கவனம் செலுத்தப்படாவிட்டால், அது நெல்லின் விளைச்சலையும் மற்றும் தரத்தையும் மோசமாகப் பாதிக்கும். இது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, நெற் களையை கட்டுப்படுத்த விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நாடு முழுவதும் நெற் களைகள் கட்டும் ஊக்குவிப்பு வாரத்தை விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
நெற் களையின் விரைவான பரவலுக்கு பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. அவற்றில் முறையான நில தயாரிப்பு இல்லாமை, நெல்லுடன் கலப்பு விதை நெல்லை பயன்படுத்துதல், நெல் விதைப்பு முறையின் பரவலான பயன்பாடு, நெல் வயல்களை தரிசு நிலமாக்குதல், நெல் விளைச்சலுக்கு தண்ணீர் பற்றாக்குறை, விவசாய உபகரணங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றின் மூலம் நெற் களைகள் பரவுதல், நெற் களையை கண்டறிவதில் விவசாயிகளுக்கு சிரமம் (உ+ம்: பாரம்பரிய நெல் என தவறாகப் புரிந்துகொண்டு கட்டுப்படுத்துவதை புறக்கணித்தல்), மற்றும் நெற் களை கட்டலுக்கு பொருத்தமான களைக்கொல்லிகள் தற்போது இல்லாமை முதலியன அடங்கும்.
நெற் களையை துல்லியமாக கண்டறியவும், அதனை கட்டுப்படுத்தவும் விவசாயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த நெற் களை கட்டுப்படுத்தல் பொதி பற்றி விவசாயிகளுக்குக் கற்பிக்கும் பொருட்டு மாகாண விவசாயத் திணைக்களங்கள் மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியன இணைந்து செயற்பட்டுள்ளன.