இலங்கையின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களுக்கும் மற்றும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதர் திரு ரெவுவன் அஷாருக்கும் இடையிலான ஒரு சந்திப்பு 2025 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி அன்று கொவிஜன மந்திரவில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, கமத்தொழில், கால்நடைகள், நீர்ப்பாசன தொழில்நுட்ப பரிமாற்றம், முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் நவீன விவசாய முறைகள் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே விஷேட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
தூதரின் கூற்றுப்படி, இஸ்ரேல் ஒன்றரை வருடங்களாக சவாலான சூழ்நிலையை கடந்து வந்துள்ளதாகவும், பயங்கரவாதத்தை திறம்பட எதிர்த்துப் போராடியுள்ளதாகவும், அத்துடன் பொறுமையுடனும் வலிமையுடனும் ஏராளமான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இஸ்ரேலின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி கருத்து தெரிவித்த தூதர், நாட்டின் பொருளாதாரம் தற்போது நிலையான வளர்ச்சியை அனுபவித்து வருவதாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் 4% வீதமாக உள்ளதாகவும் கூறினார். முதலீட்டு வாய்ப்புகள் மிகவும் கவர்ச்சிகரமானவையாக உள்ளதாகவும், குறிப்பாக புத்தாக்க மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அவை மிகவும் கவர்ச்சிகரமானவையாக உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார். இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்தப்படும் 32 “விஷேட நிலைய” (விஷேட நிலையங்கள்) விவசாயக் கருத் திட்டங்கள் வெற்றிகரமாக செயற்பட்டு வருவதாகவும் மற்றும் இலங்கையிலும் அத்தகைய கருத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு நிலவுவதாகவும் தூதர் மேலும் சுட்டிக் காட்டினார். மேலும், இதுபோன்ற ஒரு கருத் திட்டத்தின் மூலம் இலங்கை விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்ப அறிவையும், தொழில் பயிற்சியையும் வழங்க முடியும் எனவும் அவர் கூறினார். இலங்கைக்குப் பொருத்தமான விவசாய மாதிரி பற்றிய மேலதிக நுண்ணறிவைப் பெறுவதற்கு, தூதர் அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களை இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்யுமாறு அழைத்தார். இந்த விஜயத்தின் போது, இஸ்ரேலின் நவீன விவசாய தொழில் நுட்பங்கள், கருத் திட்டங்கள் மற்றும் முறைகள் என்பவற்றை நேரடியாகக் கண்டு கொள்ளவும், இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்குவதற்குத் தேவையான தூரநோக்கை அடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிப்பதாகவும் தூதர் தெரிவித்தார். இந்த நோக்கத்திற்காக இலங்கை தரப்பு முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் இளைஞர்களை விவசாயத் துறையின்பால் ஈர்ப்பது பற்றி தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்கள் அந்த நோக்கத்திற்காக விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் ஒரு அத்தியாவசிய அங்கமாகும் என்பதை குறிப்பாக சுட்டிக் காட்டினார். நவீன தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் அமெச்சூர் முறைகள் கொண்ட விவசாயத் துறையை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் எனவும் அமைச்சர் திரு கே.டீ. லால்காந்த அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இலங்கையில் சிறிய அளவிலான விவசாய நிலங்களை ஒன்றிணைத்து அவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அமைச்சர் திரு லால்காந்த குறிப்பிட்டார். விவசாயிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் கமக்காரர் அமைப்புகளை உருவாக்குவது அவசியம் எனவும், இதனால் விவசாயத்தின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் எனவும், வணிக ரீதியாக செயற்படுவதன் மூலம் செலவுகளைக் குறைக்கலாம் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார்.