MOA (1)

 

 

   



அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு Paul Stephens மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டி. லாந்காந்த ஆகியோருக்கு இடையிலான ஒரு சந்திப்பு 15 ஆம் திகதி அமைச்சில் இடம்பெற்றது

WhatsApp Image 2025-05-15 at 3.18.47 PM (2) 1

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நிலவுகின்ற உறவுகளை வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 15 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டி. லால் காந்த அவர்களுக்கும் மற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு Paul Stephens அவர்களுக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் துணை உயர் ஸ்தானிகர்கள் லலிதா கபூர், Paul Stephens மற்றும் சிவசுதன் ராமநாதன் ஆகியோரும் மற்றும் கம்தொழில் அமைச்சைப் பிரதிநிதிப்படுத்தி அஜித் புஷ்பகுமார, திரு எச்.எம். அமரசிங்க மற்றும் ஹேமசிங்க கோட்டாபய ஆகிய அடங்கிய பிரதிநிதிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் முதலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அமோக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் புதிய அரசாங்கத்துடன் நெருக்கமாகவும் உண்மையாகவும் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் புதிய விவசாய மற்றும் பயிர்ச்செய்கைத் திட்டங்கள் குறித்து அமைச்சரின் கருத்துக்களையும் உயர் ஸ்தானிகர் கேட்டறிந்தார். மேலும், அவுஸ்திரேலியா நீண்ட காலமாக இலங்கையின் விவசாயத்திற்கு உதவி வருவதாகவும், எதிர்காலத்தில் உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி மற்றும் ஆலோசனை சேவைகளை தொடர்ந்து வழங்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இலங்கையில் விளைச்சலை அதிகரிப்பதில் விஷேட கவனம் செலுத்தப்படும் எனவும் உயர் ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த, நிலம் துண்டு துண்டாகப் பிரிவதைக் குறைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், அதன் நிமித்தம் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். விவசாயிகளின் நில உரிமைகளை உறுதி செய்யும் அதே வேளையில், தற்போதுள்ள விவசாய நிலங்களை பாரிய விளைச்சல் பகுதிகளாக மேம்படுத்த வேண்டும் எனவும், இதற்காக விவசாயிகள் ஒன்றிணைந்து கமக்காரர் அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். இந்த நிறுவன முறையை விவசாயத்திற்கு அப்பாற்பட்ட பல துறைகளில், பால் பண்ணை, கோழி மற்றும் முட்டை உற்பத்தித் தொழில் உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவதன் மூலம், உற்பத்தி செலவுகளைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் கூறினார்.

மேலும், பல நாடுகள் இலங்கையின் விவசாய நிலங்களை அவற்றின் சொந்த நுகர்வுத் தேவைகளுக்காகப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், இது இலங்கைக்கு உதவுவது பற்றியது அல்ல, மாறாக இலங்கையில் உள்ள நிலத்தை அவை சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது பற்றியது எனவும் அமைச்சர் கூறினார். இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும், விவசாயத்தை மேம்படுத்துவதும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என விளக்கிய அமைச்சர், இதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் மேலும் கூறினார்.

இதற்கு பதிலளித்த உயர் ஸ்தானிகர், இலங்கையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எதிர்காலத்தில் தேவையான ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக கூறினார்.

சமூக வலையமைப்பு

 Facebook

 

ytpngwing.com YouTube

 


                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்