அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங் அவர்களுக்கும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த அவர்களுக்கும் இடையில் ஒரு விசேட சந்திப்பு இன்று (18) கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இங்கு விவசாயத்தை கட்டியெழுப்புவதற்கும் உள்நாட்டு விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான உதவியை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய முறை பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு உள்நாட்டு உற்பத்திற்கு தேவையான வெளிநாட்டு சந்தை வாய்ப்பை தேடிக்கொள்ளல், உள்நாட்டு கமக்காரர் அமைப்பு எண்ணக்கருவை முன்னெடுத்துச்செல்ல தேவையான உதவியை பெற்றுக் கொள்ளல் அதே போல் வன விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்கு தேவையான தொழில் நுட்ப உதவியையும் மற்றும் ஆலோசனை சார்ந்த உதவியையும் பெற்றுக் கொள்ளல் முதலிய விடயங்களில் அமைச்சர் கவனம் செலுத்தினார். அதே போல் உள்நாட்டு விவசாயத்தை கட்டியெழுப்புவதற்கும் மற்றும் உள்நாட்டு கமக்காரர் அமைப்புகளுக்கு அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கை ஊழியர்படையின் உதவியை பெற்றுக் கொள்வதிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இணைந்த அமெரிக்க தூதுவர் இலங்கையின் தேங்காய் பாலையும் மற்றும் தேங்காய் மைய உற்பத்திகளையும் நவீனப்படுத்த தேவையான உதவியை வழங்குவதற்கு இணங்கினார். அதே போல் காலநிலை வித்தியாசங்களுக்கு மத்தியில் விவசாயத்திற்கு ஏற்படும் சவால்களை பயனுள்ள விதத்தில் சமாளிப்பதற்கு தொழில் நுட்ப உதவியையும் மற்றும் ஆலோசனை சார்ந்த உதவியையும் வழங்குவதற்கும் தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு டீ.பி. விக்ரமசிங்க, மேலதிக செயலாளர் (விவசாய தொழில் நுட்பம்) திருமதி ஷிரோமணி எதிரிமான்ன ஆகியோர் அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.