உலக வங்கியின் கடன் உதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் உதவி ஆகியவற்றின் அடிப்படையில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சும் பெருந்தோட்ட கைத்தொழில்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும் இணைந்து 2017 ஆம் ஆண்டில் ஆரம்பித்த விவசாயத் துறை நவீனமாக்கல் கருத் திட்டத்தின் நிறைவை முன்னிட்டு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த அவர்களின் தலைமையில் 2024.12.13 ஆம் திகதி பத்தரமுல்ல சுகுருபாய கேட்போர்கூடத்தில் நிறைவு வைபவம் இடம்பெற்றது.
இதில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு இடையில் பல பிரிவுகளின் கீழ் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த பயனாளிகள் மூவருக்கும் மற்றும் இலங்கையில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கமக்காரர் அமைப்புகளின் எண்ணக்கருவின் கீழ் உருவாகிய கமக்காரர் அமைப்புகளுக்கு இடையில் சிறந்த 10 கமக்காரர் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் சகல பயனாளிகளினதும் விபரங்கள் அடங்கிய ஒரு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அறுவடைகளை பதனிடுவதற்காக தாபிக்கப்பட்டுள்ள ஒரு சில நிலையங்கள் Zoom தொழில் நுட்பத்தின் ஊடாக நேரடியாக ஆரம்பித்து வகை்கப்பட்டன.
இந்த ஒரு சில அம்சங்களை சிந்திக்க வைத்துள்ள ஒரு சில விவகாரங்களாக மாற்ற வேண்டும் என இதன் போது கருத்துத் தெரிவித்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த அவர்கள் குறிப்பிட்டார்கள். மேலும் பல நாட்டு நிறுவனங்களை அடிப்படையாகக்கொண்டு விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக விவசாயிகள் ஒன்றிணைந்து அமைக்கும் நிறுவனங்களை அடிப்படையாகக்கொண்டு விவசாயத் துறையை மேம்படுத்துதல், விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிகளை ஆரம்பித்தல், அதே போல் விவசாயத் துறையை டிஜிட்டல்மயமாக்குதல் முதலியன தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள்களாகும் எனவும் அதன் நிமித்தம் தேவையான அத்திவாரம் இந்த கருத் திட்டத்தின் மூலம் இடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கூட்டு வயல் நிலங்கள் முறையை மட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று தமது பங்குகளை பௌதீக ரீதியில் கண்டு கொள்ள முடியாமல் அதனை ஆவணங்களுக்கு மட்டும் மட்டுப்படும் அளவு வரை மேம்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் தொழில் நுட்பத்தை உச்சளவில் பயன்படுத்தி விவசாயத் துறையில் பயனை அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
உறவினர்களை உபசரித்தல், நண்பர்களை உபசரித்தல் கலாச்சாரத்தை இந்த கருத் திட்டங்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்ளாமல் அரச நிறுவனங்களையும், தனியார் துறை நிறுவனங்களையும், விவசாயிகளையும் இணைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் அழகான ஒரு நாட்டை கட்டியெழுப்புவது தனது அபிலாஷை என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.