2023 ஆம் ஆண்டில், இலங்கையின் முழு விவசாயத் துறையாலும் 2.6 சதவீத சாதகமான வளர்ச்சியை அடைய முடிந்தது.
இந்த நிலைமை 2022 ஆம் ஆண்டில் பாதகமான வளர்ச்சியாக பதிவாகியது. இது 4.2 சதவீதமாகும்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் நெற் பயிர்ச் செய்கையில் 20 சதவீத சாதகமான வளர்ச்சியை அடைய முடிந்துள்ளது. ஏனைய நீண்டகாலப் பயிர்கள் செய்கையில் 8.9 சதவீதமும், பழப் பயிர்கள் செய்கையில் 7.2 சதவீதமும், உவர்ப்பு நீர் மீன்பிடியில் 4.9 சதவீதமும், காய்கறிகள் பயிர்ச் செய்கையில் 3.2 சதவீதமும், தானியப் பயிர்கள் செய்கையில் 2.9 சதவீதமும், கால்நடைகள் உற்பத்தியில் 1.8 சதவீதமும், விவசாய ஆதரவு சேவைகளில் 1.5 சதவீதமும் என சாதகமான வளர்ச்சியை அடைய முடிந்துள்ளது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி தேசிய மர நடுகைத் தினத்திற்கு தேவையான தாவர செடிகளை பெற்றுக் கொள்வதற்காக இன்று (20) காலை 10.16 மணியளவில் விவசாய அமைச்சில் விதை நடும் நிகழ்வு இடம்பெற்றது. அங்கு தோட்டக்கலைக்கு பயன்படுத்தப்படும் தாவர செடிகள் மற்றும் விதை நடும் முறையில் தயாரிக்கப்பட்ட வாழை செடிகள் என்பன அமைச்சர் அடங்லாக பல அதிகாரிகளின் பங்களிப்புடன் நடப்பட்டன.
விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுகையில், ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள சுப தாவர நடுகை நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் 100,000 தோட்டங்களிலும், விவசாயத் திணைக்களத்தினால் 30,000 தோட்டங்களிலும் மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையினால் 1 மில்லியன் தேயிலை செடிகளையும், ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் 1.7 மில்லியன் பாக்கு மரங்களையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் தாம் விரும்பும் மரக்கறிப் பயிர்களை அல்லது மூலிகை செடிகளை சொந்த தோட்டத்தில் வளர்ப்பதற்காக பயன் தரும் செடிகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு மேலதிகமாக, 2023 ஆம் ஆண்டுக்கான நெற் செய்கைக்காக ஜயஸ்ரீ மஹா போ பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் புதிய அரிசி திருவிழாவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச். எல். அபேரத்னவும் கலந்து கொண்டார்.