කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



இலங்கையில் முதன்முறையாக பனை மைய கைத்தொழிலில் ஈடுபடுகின்ற 1500 பேருக்கு தேசிய தொழில் திறன் சான்றிதழ்கள் (NVQ 3) வழங்கப்படுகின்றன.

AGRI6749 1

முதன்முறையாக இலங்கையில் பனை மைய கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு தேசிய தொழில் திறன் சான்றிதழை வழங்க பனை அபிவிருத்தி சபை மற்றும் தேசிய தொழில் பயிற்சி சபை ஆகியன நடவடிக்கையை எடுத்துள்ளன.

இதன்படி, முறையான பயிற்சியின் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை மைய உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள 1500 பேருக்கு நேற்று (19) தொழில் திறன் சான்றிதழ்கள் (NVQ 3) வழங்கப்பட்டன. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி

ஆகிய பகுதிகளில் பனை மைய கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள 06 பேருக்கு அமைச்சரினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், பனை மைய கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழில்முனைவோர்களை வலுவூட்டும் பொருட்டு இலங்கை வங்கியுடன் இணைந்து 5 இலட்சம் ரூபா கடனுதவியை குறைந்த வட்டியில் வழங்கும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

பனை மைய கைத்தொழிலில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு உயிர் காப்பு, ஆபத்து முகாமைத்துவம் போன்ற பிரிவுகள் தொடர்பான ஒரு விஷேட பயிற்சி வழங்கப்படுகின்றது. அந்த முறையான பயிற்சியை தேசிய தொழில் பயிற்சி சபை வழங்கியுள்ளது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர, தென்னை மற்றும் பனை மைய கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தொழில் திறன் சான்றிதழ்களை (NVQ 3) வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி, இந்த நாட்டில் தென்னம் மற்றும் பனை மைய கைத்தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவதற்கு தேவையான பாடத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழில் பயிற்சி சபை தெரிவித்துள்ளது.

தற்போது, ​​எமது நாட்டில் 11 மில்லியன் பனை மரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் 30 சதவீதம் மட்டுமே சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் பனை மரங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பனை மரங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா இருந்தாலும், பனை மைய உற்பத்திகளை அதிக எண்ணிக்கையில் இலங்கை உற்பத்தி செய்கின்றது. அதே போல் முழு உலகிற்கும் இலங்கையில்தான் ஒரே ஒரு பனை ஆராய்ச்சி நிறுவகம் உள்ளது.

சர்வதேச சந்தையில் எமது நாட்டில் பனம் பாணிக்கும் மற்றும் பனம் சாராயத்திற்கும் சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றத. தற்போது, ​​ பிரான்ஸ், கனடா மற்றும் டுபாய் போன்ற நாடுகளுக்கு பனம் பாணியும் மற்றும் பனம் சாராயமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதியினால் ஆண்டுக்கு 45,000 டொலர்கள் ஈட்டப்படுகின்றன.

இந்த நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பதிராஜ அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்