web Header2

   



Agri Tech 24 விவசாயத் தொழில் நுட்பக் கண்காட்சி மார்ச் மாதம் 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை ஹுங்கம பட்டஅத்த விவசாயத் தொழில் நுட்பப் பேட்டை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படும்

Board 10x8 NEW final222

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினதும் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களினதும் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட Agri Tech 24 விவசாயத் தொழில் நுட்ப கண்காட்சியை மார்ச் மாதம் 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை ஹுங்கமா பட்டஅத்த விவசாயத் தொழில் நுட்பப் பேட்டை வளாகத்தில் நடத்த ஏற்கனவே அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய விவசாய தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இக்கண்காட்சியில், அரசாங்க நிறுவனங்கள் மூலம் சுமார் 65 கொட்டகைகள், 26 சிறுதொழில் முனைவோர் விவசாய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் 35 எண்ணிக்கைக்கும் அதிகமான தனியார் துறை கண்காட்சிக் கொட்டகைகளும் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

தற்போது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் புதிய விவசாய தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்துவது இந்த கண்காட்சியின் விஷேடத்துவமாகும். மேலும், புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறுதல், குறைந்த அளவு தண்ணீரையும் மற்றும் குறைந்த அளவு உரத்தையும் பயன்படுத்தி தரமான விவசாயப் உற்பத்திகளை அறிமுகப்படுத்தல், புதிய இன விதைகளை அறிமுகப்படுத்தல், கிருமிகளினால் ஏற்படும் அழிவுகளைத் தடுத்தல் போன்ற பல அம்சங்கள் பற்றி பாடசாலை மாணவர்கள், விவசாயத் தொழில் முனைவோர் அடங்கலாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மேற்கூறிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை கண்காட்சி நடைபெறும். மேலும், இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண விழா 2024.03.02 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஹுங்கம பட்டஅத்த விவசாய தொழில் நுட்பப் பேட்டை வளாகத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற உள்ளது.

 

சமூக வலையமைப்பு

 Facebook
                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்