நேற்று (19 ஆம் திகதி) ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37-வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டிற்கான தலைமைத்துவத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இதற்கு சற்று முன்னர் நியமிக்கப்பட்டார்.
அதன்படி 2024 - 2026 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு அந்த மாநாட்டிற்கு இலங்கை தலைமை வகிக்கும். அதன் பொறுப்பு விவசாய மற்றும் பெருந்தாட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.