කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



இளைஞர் சமூகத்தை விவசாயத்தின்பால் ஈர்க்கும் வகையில் இந்த வருடம் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

PLNT5206 2

இந்த நாட்டில் இளைஞர் சமூகத்தை விவசாயத்தின்பால் ஈர்க்கும் வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வருடம் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

நாகொல்லாகம, இரத்மலை எனும் பிரதேசத்தில் வசிக்கும் திரு. சஞ்சீவ அமரகோன் என்ற இளைஞனால் பாதுகாப்பான கூடாரங்களினுள் பயிரிடப்பட்டுள்ள கறிமிளகாய் மற்றும் தக்காளி ஆகிய பயிர் தோட்டங்களை அவதானிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரு. சஞ்சீவ அமரகோன், ஒரு இளம் பட்டதாரி. தொழில் ரீதியாக இவர் ஒரு அரச ஊழியர். இவர் 06 பாதுகாப்பான கூடாரங்களில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கறிமிளகாய், தக்காளி ஆகிய பயிர்களை வெற்றிகரமான முறையில் பயிரிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையால் காய்கறிப் பயிர்கள் அழிந்தாலும், இந்தக் கூடாரங்களில் பயிரிடப்பட்ட காய்கறிப் பயிர்ச் செய்கை மிகவும் வெற்றி அடைந்துள்ளது.

சஞ்சீவ அமரகோன் தனது அறுவடை செய்த பயிர்களுக்கு மிக அதிக விலை கிடைப்பதாக குறிப்பிட்டார். திரு. சஞ்சீவ அமரகோன் அண்மைய நாட்களில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் தான் அதிக வருமானத்தை ஈட்டியதாகவும் குறிப்பிட்டார்.

சஞ்சீவ அறுவடை செய்த காய்கறிகளை வாங்க பல்பொருள் சந்தைகளில் இருந்து அதிக பொருள் கொள்வனவு கட்டளைகள் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் திரு. மகிந்த அமரவீர-

கடந்த நாட்களாக, எமது நாட்டில் காய்கறிகளின் விலை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. மழையால் பெரும்பாலான காய்கறிப் பயிர்கள் அழிந்தன. ஆனால் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்ட பாதுகாப்பான கூடார வசதிகளில் பயிரிடப்பட்டதால் நாட்டுக்குத் தேவையான மரக்கறிகள் ஓரளவு சந்தைக்கு கிடைத்தன.

2023 ஆம் ஆண்டில், பாதுகாப்பான கூடாரங்களில் பயிரிடும் முறையை பிரபலப்படுத்த நிதிகளை நாம் ஒதுக்கினோம். குறிப்பாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவும் மற்றும் எமது வெளிநாட்டுக் கருத் திட்டங்களின் கீழும் நிதி ஒதுக்கீடுகளை நாம் பெற்றுக் கொடுத்தோம். அதே போன்று, 2024 ஆம் ஆண்டில், இளைஞர் சமுதாயத்திற்கு, பாதுகாப்பான கூடாரங்களில் பயிரிடும் முறையை பிரபலப்படுத்த நிதியை நாம் பெற்றுக் கொடுப்போம். அதன் நிமித்தம் நாம் 1000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம்.

எமது நாட்டில் உள்ள விவசாயிகளில் 80 சதவீதமான விவசாயிகள் 50 வயதுக்கு மேற்பட்ட வயதான விவசாயிகள். ஆனால் இளைஞர்கள் சுமார் 20 சதவீதமாக உள்ளனர். எமது நாட்டில் விவசாயம் செய்வதில் இளைய சமுதாயத்திற்கு நம்பிக்கை இல்லை. எனவே, முடிந்தவரை இளைஞர்களை ஈர்ப்பதே எமது குறிக்கோள். அதன் நிமித்தம் பல சிறப்பான வேலைத் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். கடந்த ஆண்டு ஏழு இளைஞர் தொழில்முனைவோர் கிராமங்களை நாம் ஆரம்பித்தோம்.

சஞ்சீவ அமரகோன் போன்ற இளைஞர்கள் எமது நாட்டுக்கு தேவை. தந்தையின் வற்புறுத்தலின் பேரில் இவர் அரச தொழிலில் இணைந்தாலும், காய்கறி விவசாயத்திலிருந்து அதிக வருமானத்தை ஈட்டுகின்றார். இன்னும் சில வருடங்களில் இவர் நல்ல தொழிலதிபராக வருவார் என்பது புலனாகுகின்றது. இன்றைய இளைஞர்களில் பலர் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இவர்கள் அரச தொழில்களை நாடுகின்றனர். விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா நிதியை வழங்கி, விவசாயத்திற்கு தேவையான புதிய தொழில் நுட்ப அறிவை இவர்களுக்கு வழங்கினால், இந்த நாட்டு இளைஞர்கள் ஒருபோதும் அரசாங்க தொழில்களை நாட மாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில், கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

PLNT5209 3 PLNT5237 4 PLNT5259 5

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்