කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்காக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் விவசாய உணவு முறைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கும் மற்றும் அவற்றை மறுசீரமைப்பதற்கும் என வழிகாட்டுவதற்கான ஒரு உயர்மட்ட சர்வதேச UN FAO மாநாடு ஒன்று கூடுகின்றது.

download

பல மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, குறிப்பாக பட்டினியையும் மற்றும் வறுமையையும் தணித்தல் என்ற நிலையான அபிவிருத்தி இலக்குகளை (நி.அ.இ. 2,1,10) அடைவதில் முன்னேற்றம் குறைந்துள்ளதை அடுத்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விவசாய உணவு முறைகளை மாற்றியமைக்கும் நோக்கில் ஒரு பெரிய பலதரப்பு மாநாடு இன்று இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரில் ஆரம்பமாகியது.

மில்லியன் கணக்கான உற்பத்தியாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் நுகர்வோர் ஆகியோரை மறைமுகமாகப் பாதித்த தொற்றுநோய்கள், காலநிலை அவசரநிலைகள், ஸ்தீரமற்ற சந்தை நிலைகள் மற்றும் பொருளாதாரங்கள் என்பவற்றில், பல ஆண்டுகளுக்குப் பின்னர், FAO அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய மாநாட்டின் 37-வது அமர்வு (#APRC37), ஆசிய-பசிபிக் பிராந்திய விவசாய உணவு முறைகளை மறுசீரமைக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய சர்வதேச, பலதரப்பு மைல்கல்லாக விளங்குகின்றது.

#APRC37 மாநாடு FAO அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றது. இரண்டு பகுதிகள் கொண்ட இந்த உச்சி மாநாடு இன்று சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்துடன் தொடங்கி பெப்ருவரி மாதம் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவடையும். பெப்ருவரி மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்த அமைச்சர்களுடனான அமைச்சரவை கூட்ட அமர்வும் நடைபெறவுள்ளது.

அவதானம் அதிகம், ஆனாலும் வீணாக்க நேரம் இல்லை.

உலகின் மிகப் பெரிய பிராந்தியத்தில் பட்டினி, வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள், கடந்த தசாப்தங்களில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு ஆபத்தில் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த போது, உதவி பணிப்பாளர் நாயகமும் மற்றும் FAO அமைப்பின் பிராந்திய பிரதிநிதியுமான ஜோங்-ஜின் கிம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "நாம் தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஒன்றிணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். உணவுப் பாதுகாப்பிலும் மற்றும் வாழ்வாதாரங்களிலும் தொற்றுநோயின் நீண்ட கால மற்றும் ஆழமான சமூக-பொருளாதார தாக்கங்கள் தெளிவாகியுள்ளன. ஆனால் இவை பிணக்குகள், காலநிலை மாற்றத்தின் விளைவுகள், சூழல் மாசடைதல், எல்லை தாண்டிய கிருமிகள் மற்றும் நோய்கள் மற்றும் குறிப்பாக விவசாய உற்பத்தியை பாதிக்கும் பல்லுயிர் இழப்புகள் என்பன அடங்கலாக பல அவதானங்களினாலும் மற்றும் ஆபத்துகளினால் வெளிப்பட்டுள்ளமை தெளிவாகுகின்றது”.

2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய நவீன ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பொதுப் பகுப்பாய்வு, இந்தப் பிராந்தியத்தில் சுமார் 371 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக காணப்படுவதாகவும், இது உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் தொகையில் அரைவாசியை பிரதிபலிப்பதாகவும் சுட்டிக் காட்டுகின்றது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 24 சதவீதமானோர் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் உணவுப் பாதுகாப்பற்றவர்களாக காணப்படுகின்றனர்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வளர்ச்சி குறைவு, 23.4 சதவீதம் அதிகமாக உள்ளது, 2000 ஆம் ஆண்டிலிருந்து இதன் குறைந்து வரும் போக்கு காணப்பட்டபோதிலும், பிராந்தியத்தில் இது ஒரு பொது சுகாதார பிரச்சனையாக தொடர்ந்து இருந்து வருகின்றது.

அண்மை ஆண்டுகளில், பிராந்தியத்தில் ஒரு ஆரோக்கியமான உணவின் சராசரி செலவு சமநிலை அடிப்படையில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 4.15 டொலர் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மக்கள் தொகையில் ஏறத்தாழ 45 வீதமானோருக்கு அல்லது 1.9 பில்லியன் மக்களுக்கு ஆரோக்கியமான உணவுக்கான அணுகல் இல்லாதுள்ளது.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டினிக்கு எதிரான போராட்டத்தின் முன்னேற்றம் குறைந்தமை தொற்றுநோய்க்கு முன்னர் நிகழ்ந்தது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். எனவே எமது உணவு முறைமைகளை மிகவும் திறமையானதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், மீள்தன்மையுடையதாகவும், நிலையானதாகவும் மாற்றியமைப்பதற்கு அவற்றை மீண்டும் கட்டியழுப்புவது முக்கியம்” என திரு. கிம் கூறினார். "உலகளாவிய விவசாய-உணவு முறைமைகளை மாற்றியமைப்பதானது காலநிலை ரீதியான ஒரு தீர்வாகும், இது உணவு கிடைத்தல், உணவுக்கான அணுகல் மற்றும் உணவு மலிவு ஆகியவற்றை உறுதி செய்வதில் திறம்பட பங்களிக்கின்றது."

வறுமை ஒழிப்பு என்று அறியப்படும் நி.அ.இ. 2 அடையும் முகமாக APRC இன் மூலம் முதலீடு - வெளி மற்றும் உள் வாரியாக - திரட்ட ஊக்குவிக்கின்றது என்ற விடயம் APRC பிரதிநிதிகளில் காதுகளில் விழுந்தது. சமூகப் பாதுகாப்பு; உணவு இல்லாமல் போதல் மற்றும் கழிவு சார்ந்த பிரச்சினை என்பவற்றை எதிர்த்துப் போராடுதல் மற்றும் தண்ணீரைப் பாதுகாத்தல்; சிறிய தீவை மையமாகக் கொண்டு அபிவிருத்தி அடைந்து நாடுகள் (SIDS), நிலத்தால் சூழப்பட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் குறைந்தளவு அபிவிருத்தி அடைந்த நாடுகள் ஆகிய நாடுகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு தகவமைப்பு திறன் மேம்பாடு மற்றும் கூட்டு பதில்கள் அடங்கலாக, வறுமையை தணிப்பதற்காக முன்மொழியப்பட்ட முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிக்க FAO அமைப்பு அதன் உறுப்பு நாடுகளுக்கு உதவுகின்றது.

இந்த அமைப்பு தாவரங்கள், கால்நடைகள், மீன்பிடி மற்றும் காடு வளர்ப்பு ஆகிய துறைகளில் அதன் உறுப்பு நாடுகளுக்கு உள்ள ஆற்றலையும் கட்டியெழுப்ப உதவுகின்றது. அதாவது, இயற்கை சார்ந்த தீர்வுகளை ஊக்குவித்தல்; விஞ்ஞானம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை வலியுறுத்தல் மற்றும் காலநிலை மற்றும் மின்சக்தி-நேர்த்தியான விவசாய நடைமுறைகள் என்பவற்றை பரப்புதல்.

சிரேஷ்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடிய பின்னர், பிராந்தியத்தின் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அமர்வு, தொடர்ச்சியான வட்டமேசை மாநாட்டு அடிப்படையில் உயர்மட்ட விவாதங்களின் நிமித்தம் கூடும். FAO அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் QU Dongyu அவர்களும் அமைச்சர் மட்ட அமர்வில் கலந்து கொள்வார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான FAO அமைப்பு பிராந்தியத்தின் 37-வது அமர்வு முடிவடைந்த நிலையில், அண்மை ஆண்டுகளில் தொற்றுநோய் மற்றும் ஏனைய கடுமையான நெருக்கடிகள் என்பவற்றில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டும். பிராந்தியத்தின் விவசாய உணவு முறைமைகளை மீண்டும் கட்டியெழுப்பி பரிவர்த்தனை செய்வதற்கான மூலோபாயங்கள், மிகவும் சிறந்த உற்பத்தி, மிகவும் சிறந்த ஊட்டச்சத்து, மிகவும் சிறந்த சூழல் ஆகியவற்றினால் கிடைக்கச்செய்யப்படும். அதன் மூலம் எவரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் சிறந்த ஒரு வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்