Header jpg

   



வரலாற்றில் பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகூடிய நஷ்டஈட்டுத் தொகை சேதம் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கழிய முன்னர் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

 GRI5843 1

2023 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் வறட்சியினாலும் மற்றும் வெள்ளத்தினாலும் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களின் நிமித்தம் விவசாயிகளுக்கு மிகப் பெரும் நஷ்டஈட்டுத் தொகையை பயிர் சேதமாகி இரண்டு மாதங்கள் கழிய முன்னர் வழங்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

2023 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று (19) காலை அங்குனுகொலபலஸ்ஸவில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும் வரை விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் நிதியில் இருந்து இந்த முதற்கட்டத்திற்கு 389 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 375 விவசாயிகளுக்கு அமைச்சரினால் நட்டஈடு வழங்கப்பட்டது. இந்த நஷ்டஈடுகளை வழங்குவதில் நெல், மிளகாய், உருளைக்கிழங்கு, சோளம், சோயாபீன்ஸ், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். அதன் கீழ் வறட்சியினாலும், கடும் மழையினாலும் மற்றும் காட்டு யானைகளினாலும் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்ந்து இந்த நஷ்டஈடு அவற்றுக்கும் வழங்கப்படும்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி, வறட்சியினால்ல் 65,000 ஏக்கரும், மழையினால் 11,000 ஏக்கரும் சேதமடைந்துள்ளன. பயிர் சேத நஷ்டஈடு ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.100,000 தொகைக்கு அமைய வழங்கப்படுகின்றது.

இன்றைய நஷ்டஈட்டுத் தொகையின்படி, அம்பாந்தோட்டை மகாவலி பிரதேசத்தில் 13,451 ஏக்கருக்கு 360 மில்லியன் ரூபாவும், சந்திரிகாவெவ, கொலன்ன, பானமுரே, திபொல்கெட்டிய கமநல அதிகாரப் பிரதேசங்களில் 89 ஏக்கருக்கு 24,98,400 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர அவர்கள் -

2023 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நிலவிய அதிக வறட்சியினாலும் மற்றும் அதன் பின்னர் தொடர்ந்து பெய்த கடும் மழையினாலும் எமது விவசாயிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கு கௌரவ ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் பயிர் சேதத்திற்கு நஷ்டஈடு வழங்க முன்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுவாக, பயிர் சேத நஷ்டஈடு ஓராண்டுக்குப் பிறகு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பயிர் சேதம் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கழிய முன்னர் இந்த முறை நாம் பயிர் நஷ்டஈடு வழங்கும் பணி ஆரம்பித்தோம்.

பயிர் சேதத்திற்கு நஷ்டஈடு வழங்க தேவையான நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்திடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி நஷ்டஈட்டுத் தொகையை வழங்குமாறு அந்த சபைக்கு பணிபுரை விடுத்துள்ளேன்.

பயிர் சேதத்தின் நிமித்தம் ஒரு ஹெக்டேருக்கு 100,000 ரூபாவை வழங்குவது போதாது, ஆனால் இம்முறை பெரும் தொகையை நஷ்டஈடுகளை வழங்க வேண்டியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தொகை வரலாற்றில் பயிர் சேதத்திற்காக வழங்கப்படும் அதிகூடிய தொகையாக இருக்கலாம் என்று கருதுகின்றோம்.

பயிர்கள் சேதம் அடைந்த விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். பயிர்ச் செய்கைக்கு செலவழிக்க அவர்களுக்கு நிதி வசதி இல்லை. எனவே, பயிர் சேத நஷ்டஈட்டை உடனடியாக வழங்கினால் அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என நம்புகின்றோம்.

மேலும், பயிர் சேதம் அடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் 40 லீற்றர் எரிபொருளை இலவசமாக வழங்கும் கரும பணியை இன்று தொடங்கவுள்ளோம். சீன அரசு எமக்கு வழங்கிய 6.9 மில்லியன் லீற்றர் எரிபொருளில் இரண்டு மில்லியன் லீற்றர் எரிபொருள் எஞ்சியிருக்கின்றது. பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அந்த எரிபொருளை வழங்க தீர்மானித்துள்ளோம்.

இந்த நிகழ்வில், விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் திரு டப்ளியூ. எம். எம். பீ. வீரசேக்கர அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

சமூக வலையமைப்பு

 Facebook
                         
         கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல்வளங்ஙள் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்