அடுத்த ஆண்டில் தெம்பிலி ஏற்றுமதி முன்மாதிரி கிராமத்தை அமைக்கும் திட்டமும் முன்வைக்கப்படும்.
சர்வதேச சந்தையில் இலங்கையின் தெம்பிலிகளுக்கான கேள்வி வேகமாக அதிகரித்து வருகின்றது. இலங்கையில் விளையும் தெம்பிலிக் காய்களின் ஏற்றுமதி 2023ஆம் ஆண்டில் 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர நேற்று (31) பிற்பகல் தென்னை அபிவிருத்தி சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் தென்னை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடினார். இலங்கையில் அதன் பயிர்ச் செய்யும் மற்றும் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதுவரை பெருந்தோட்டப் பயிராக பயிரிடப்படாவிட்டாலும், இந்த நாட்டில் விளையும் தெம்பிலிக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றது. 2022 ஆம் ஆண்டில் 11 மில்லியன் தெம்பிலிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது.
மேலும், இந்த ஆண்டு இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தெம்பிலிக் காய்களின் அளவு 14 மில்லியன் ஆகும். இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா ஆகும்.
மேலும், இந்த ஆண்டு ஏற்றுமதி செய்த தெம்பிலிக் காய்களின் அளவு 117 சதவீதம் அதிகரித்துள்ளது.
தெம்பிலிப் பயிர்ச் செய்கை இன்னும், எமது நாட்டில் பிரபலமாகவில்லை. எனவே மண் பரிசோதனை செய்து தெம்பிலிகளை நடுவதற்கு ஏற்ற நிலத்தை கண்டறிந்து தெம்பிலி ஏற்றுமதி மாதிரி கிராமமாக பெயரிடுமாறு தென்னை அபிவிருத்தி அதிகார சபை, தென்னை ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் தென்னை அபிவிருத்தி சபை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்தார்.
தற்போது எமது நாட்டில் பயிரிடுவதற்கு ஏற்ற பல வகையான தெம்பிலி இனங்களை நாம் இனங்காணாத நிலையில் பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வருகின்ற தெம்பிலி இனங்களே தற்போதும் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆனால், அதிக சுவையும் கவர்ச்சியும் உடைய, குறுகிய காலத்தில் பலன் தரும் புதிய தெம்பிலி இனத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆராய்ச்சியை தொடங்குமாறு இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.