வியட்நாம் அரசாங்கத்திற்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் விவசாய தொழில்நுட்ப பரிமாற்ற வேலைத்திட்டத்திற்கான இருதரப்பு உடன்படிக்கையை செய்து கொள்வது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (24) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.
கமத்தொழில் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர மற்றும் எமது நாட்டிற்கான வியட்நாம் தூதுவர் திருமதி Ho Thi Thanh Truc மற்றும் விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றலில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விவசாய செயலாளர் திரு.குணதாச சமரசிங்க, விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் திருமதி மாலதி பரசுராமன் மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக எமது நாட்டின் விவசாயத் துறைக்கு, புதிய விவசாயத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் தற்போது பரவலாக நடைமுறையில் உள்ளது. ஆனால் அதிக பலன்களைப் பெற, நாட்டின் விவசாயிகள் புதிய விவசாய தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
ஆனால் வியட்நாம் இப்போது விவசாய தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறது. வியட்நாம் விவசாய ஆராய்ச்சி, புதிய அதிக விளைச்சல் தரும் விதைகள், கால்நடை வளர்ப்பு மற்றும் அறுவடைக்குப் பிந்தைய சேதத்தைக் குறைத்தல் முதலிய விடயங்களில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன்காரணமாகவே தற்போது எமது நாட்டில் பயன்படுத்தப்படும் விவசாய தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.
வியட்நாம் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் விவசாய தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது என தெரிவித்த அமைச்சர், கடந்த காலத்தில் இருந்த சிரமங்களை தவிர்த்து தற்போதைய அரசாங்கத்தினால் அனைத்து துறைகளிலும் பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய தூதுவர், ஆசிய பிராந்தியத்தில் அதிக நெல் விளைச்சல் தரக்கூடிய பல நெல் இனங்களை வியட்நாம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், உலகின் பல நாடுகள் வியட்நாமின் விவசாயத் துறையில் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக வியட்நாமை போன்று இலங்கையும் விவசாயம் மற்றும் மீன்பிடி துறைகளுக்கு முன்னுரிமை அளித்தால் உணவு நெருக்கடியை நன்கு எதிர்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வியட்நாம் 2021-25 வரை விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல எதிர்கால இலக்குகளை அடைய உதவும் என்று அவர் கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த கமத்தொழில் அமைச்சர், அரிசி மற்றும் நெல் உற்பத்தியில் மேலும் பல மேலதிகப் பயிர்களில் தன்னிறைவு அடையும் நிலையிலேயே இலங்கை தற்போதைய வரட்சிக்கு முகம் கொடுக்க நேர்ந்தது எனவும் குறிப்பிட்டார்.