Header jpg

   



இலங்கையில் பால் மாடு வளர்ப்பை அபிவிருத்தி செய்ய பிரான்ஸிலிருந்து 07 இலட்சம் யூரோ நிதியுதவி வழங்க உரிய முகவர் நிலையங்கள் பூர்வாங்க அனுமதியை வழங்குகின

01 1

IDELF [(France Institut De L'Elevage (France Institut De L'Elevage) மற்றும் AFD (French Agency for Development)] ஆகியன இலங்கையின் பால் பண்ணை அபிவிருத்திக்கு பிரான்சின் இரண்டு முக்கிய உதவி நிறுவனங்கள் உதவியை வழங்க ஒன்றாக உடன்பட்டுள்ளன.

இதன்படி, 07 இலட்சம் யூரோவை அல்லது 250 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அந்த முகவர் நிலையங்கள் பூர்வாங்க அனுமதியை வழங்கியுள்ளன.

நேற்று (17ஆம் திகதி) பிற்பகல் இக்குழுவினர் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அடங்கலாக கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் இலங்கையின் பால் உற்பத்தித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினர்.

முன்னர், கமத்தொழில் அமைச்சின் கால்நடைகள் பிரிவு, பால் மாடுகளை வளர்ப்பது தொடர்பாக மேற்படி நிறுவனங்களுக்கு பல முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தது. அந்த முன்மொழிவுகளை பரிசீலித்ததன் பின்னர், இலங்கையின் பால் கைத்தொழில் அபிவிருத்திக்கு இரு நிறுவனங்களும் இணைந்து நிதி உதவியையும் மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் ஆற்றல் மேம்பாடு, பாலின் தரத்தை உயர்த்துதல், பால் மாடுகள் வளர்ப்பை பலப்படுத்தல் மற்றும் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல் போன்றவற்றுக்கு இவ்விரு நிறுவனங்களும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

மேலும், தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபை இந்த வடயங்களை செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கவுள்ளது.

பிரெஞ்சு ஏஜென்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி. மோனிக் டிரான் - விவசாய ஆலோசகர், திரு. விஜய் தெர்விஷி, கருத் திட்ட முகாமையாளர், திரு. லியா சோப்ரேவில்லா, கருத் திட்ட அலுவலர், திரு. ரெடா சூரிகி, நாட்டின் பணிப்பாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கமத்தொழில் அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் கால்நடைகள் பிரிவை சேர்ந்த கால்நடை வைத்தியர்கள் குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, இலங்கையில் மாடு வளர்ப்பு அபிவிருத்திக்கு தேவையான நிதியுதவியையும் மற்றும் தொழிநுட்ப உதவிகளையும் வழங்கியமைக்காக பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்த நிகழ்வில் உலக விலங்குகள் சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழுவும் பங்குபற்றியிருப்பதால், இந்நாட்டில் கால்நடைகளை வளர்ப்பதில் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

சமூக வலையமைப்பு

 Facebook
                         
         கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல்வளங்ஙள் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்